சஊதி அரபிய்யா - மக்கா முகர்ரமாவிலுள்ள புனித மஸ்ஜிதுல் ஹரமில் மன்னர் அப்துல் அஜீஸ் அகில உலக 32ஆவது திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் போட்டி 26.12.2010 ஞாயிற்றுக்கிழமையன்று துவங்கியது.
இப்போட்டியில் நான்காம் பிரிவிற்கான போட்டி 27.12.2010 அன்று நடைபெற்றது. இதில் காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சார்ந்த சகோதரர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் அவர்களின் மகன் ஹாஃபிழ் பி.எஸ்.முஹம்மத் அல்அமீன் பங்கேற்று மிகவும் சிறப்பாக ஓதினார்.
இப்போட்டியின் முடிவு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 1.1.2011 அன்று வெளியிடப்படும். இவர் வெற்றி பெற அனைவரும் பிரார்த்திக்குமாறு இவருக்கு பொறுப்பாளராக வந்துள்ள ஹாங்காங் கவ்லூன் பள்ளி மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் நஈம் கூறினார்.
இவர்களை KAWA Jeddah வின் ஆலோசகர் சகோதரர் பஷீர், செயலாளர் சகோதரர் முஹம்மத் இப்றாஹிம், செயற்குழு உறுப்பினர்கள் சகோதரர் மொகுதூம் முஹம்மத் (சீனா), சகோதரர் முஹம்மத் சாலிஹ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சகோதரர் செய்யது இப்றாஹிம் ஆகியோர் வரவேற்றனர்.
இவர்களை உபசரிக்கும் விதமாக மக்கா Moven Pick ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து சிற்றுண்டி உபசாரம் சகோதரர் மொகுதூம் முஹம்மத் (சீனா) வின் அணுசரனையுடன் அளிக்கப்பட்டது.
KWA Jeddah வின் சார்பாக அதன் செயலாளர் சகோதரர் முஹம்மத் இப்றாஹிம் “ஹாஃபிழ் பி.எஸ்.முஹம்மத் அல்அமீன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனைப் போன்று இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் நமதூர் ஹிஃளு மாணவர்கள் இன்னும் அதிகமாக கலந்து கொண்டு நமதூருக்கு பெருமை சேர்க்கும் படி வேண்டுகிறோம்.” என்று கூறினார்.
|