கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், தமிழ் மொழி பாடத்தில் சிறந்த மதிப்பெண் பெற்றமைக்காக, சென்னையிலுள்ள “தலைவர் கலைஞர் அவர்களின் அண்ணா அறக்கட்டளை” சார்பில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் முஹம்மத் அபூபக்கர் என்ற மாணவருக்கு ரூ.500 பணப்பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இம்மாணவர், தமிழ் பாடத்தில் 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்று, தூத்துக்குடி மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்றவராகவும், நகரளவில் முதல் மதிப்பெண் பெற்றவராகவும் தேர்வாகியுள்ளதாக, எல்.கே.மேனிலைப்பள்ளியின் தமிழாசிரியர் பி.ஏ.காமில் தெரிவித்தார். |