வடஅமெரிக்க காயல் நலமன்றத்தின் (நக்வா) 4-வது பொதுக்குழு கூட்டம், 19.12.2010 அன்று தொலைப்பேசி வழியே, கான்பிரென்ஸ் முறையில், நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாயகத்திலிருந்து சுற்றுபயணமாக அமெரிக்கா வந்துள்ள சகோதரர் S.T. Labeeb அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தன்னுடைய கருத்துக்களை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
மேலும் இக்கூட்டத்தில் வடஅமெரிக்க காயல் நலமன்ற உறுப்பினர் Dr. Ali Raza அவர்கள் அறிவித்துள்ள 'Survey on Health of Kayalites' (காயலர்களின் உடல் நலன் சர்வே) மற்றும் அதுகுறித்த விழிப்புணர்ச்சி (Awareness) முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் சாளை முஹம்மத் முஹிய்யதீன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-
புற்றுநோய் குறித்து கருத்துப் பரிமாற்றம்:
இன்று நம் நகரில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது மட்டுமின்றி அந்த கொடிய நோயினால் ஏற்பட்டுள்ள மரணங்கள் நம் அனைவருக்கும் மிகுந்த கவலையளிக்கிறது. கடந்த மாதங்களில் இந்த கொடிய நோயினால் மரணித்த நம் சகோதர /சகோதரிகளின் மறுமை வாழ்விற்காக இக்கூட்டத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இவ்விஷயத்தில் துவக்கமாக அக்கறை எடுத்துக்கொண்டு, செயலாற்றிய கத்தர் காயல் நல மன்றத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் இந்த கொடிய நோய் சம்பந்தமாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். அவைகளின் தொகுப்பு:-
(1) புற்று நோய் நம் நகரில் எந்த அளவுக்கு பாதிப்பினை உண்டு பண்ணியுள்ளது என்பதனை Statistical Survey மூலம் துல்லியமாக கண்டறியவேண்டும். எவ்வகை புற்று நோயால் (Liver/Skin/Breast Cancer etc) நம் மக்கள் பாதிக்கபட்டு இருக்கிறார்கள் என்பதனையும், மேலும் குறிப்பாக 9 வயது பிள்ளைக்கு கூட புற்று நோய் வந்துள்ளது என்றால் அதனுடைய சரியான காரணத்தையும் கண்டறிந்தால்தான் இப்பிரச்சனை நம்மால் ஒரு தெளிவான முடிவை காண முடியும்
(2) நாம் எல்லோரும் பொதுவாக புற்று நோயின் மூலகாரணமாக கருதுவது DCW யை தான். அதனை ஆதாரங்களுடன் கண்டறிந்தால்தான் நம்மால் சம்பந்தபட்ட நிறுவனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். இதே DCW தொழிற்சாலை குஜராத்திலும் இயங்கி கொண்டு வருகிறது. அங்கேயும் இது மாதிரி புற்று நோய் பாதிப்பு இருக்கிறதா என்று கண்டறியலாம். அல்லது நமக்கு தெரிந்த DCW (Sahupuram) ஊழியர்களை தொடர்பு கொண்டால் நிறைய விசயங்கள் தெரிய வரலாம். குறிப்பாக இதுமாதிரி பிரச்சனையில் பத்திரிகையாளர்களே (Journalist) நேரடியாக ஆய்ந்து அறிந்தால், இந்த பிரச்சனை மக்கள் மத்தியில் வெளிச்சம் பெரும். ஆனால் வெறும் யூகத்தின் அடிப்படையில் DCW தான் காரணம் என்று கருதிவிட முடியாது
(3) நாம் எல்லாரும் அறிந்துள்ளது போல புற்று நோய் எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கப் படுகிறதோ, அவ்வளவு எளிது அதற்கான சிகிச்சை. பெரும்பாலான பெண்கள் பாதிக்கபடுவது மார்பு புற்று நோயால் (Breast Cancer) தான். உடனடியான பரிசோதனை (Mammogram Test) எடுக்கப்பட்டால் சீக்கிரம் நோயை குணப்படுத்த முடியும். அதற்கான விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும்
(4) புற்று நோய் தோன்றுவதற்கு நம் உணவு முறையும் முக்கிய காரணம். நாம் நமது உணவு முறையில் நிறைய மாற்றங்களை (ஆரோக்கியமான உணவு முறை) கொண்டு வரவேண்டும். இது புற்றுநோய்க்கு மட்டுமன்றி ஏனைய நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்க வழி வகுக்கும்
காயல் நல மன்றங்கள் சார்பில் புற்றுநோய்க்கான உண்மையான காரணம் மற்றும் அதன் தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டுவரும் CFFCயை (Cancer Fact Finding Committee) பற்றி சாளை முஹம்மத் முஹிய்யதீன் அவர்கள் காயல் இணையதளத்தின் மூலம் தான் அறிந்த செய்திகளை மன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர்களுடன் (CFFC) கருத்து பரிமாற்றம் செய்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கிக் கூறினார். இது தொடர்ப்பான மன்றத்தின் கருத்துக்களை தற்பொழுது தாயகம் சென்றுள்ள சகோதரர் தௌபீக் அவர்கள் புற்றுநோய் சம்பந்தமாக நடக்கும் சந்திப்புகளில் பகிர்ந்து கொள்வார்.
காயலர்களின் உடல் நலன் சர்வே மற்றும் விழிப்புணர்வு:
நம் மன்றத்தின் உறுப்பினர் Dr. Ali Raza அவர்கள் காயல் சென்றிருந்த போது தன் நண்பர் மற்றும் இன்னும் அதிகமான மக்கள் (குறிப்பாக இளம் வயதினர்) இருதய நோயினால் பாதிக்கபட்டு Open Heart Surgery செய்து கொண்டுள்ளதை அறிந்து, அது சம்பந்தமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக முதலில் ஒரு உடல் நலன் சர்வே ஒன்றை Wavoo Wajeeha College மாணவிகள் உதவியுடன் பெண்கள் மத்தியிலும், தன்னார்வலர்கள் / மாணவர்கள் உதவியுடன் ஆண்கள் மத்தியிலும் நடத்த முயற்சிகள் எடுத்து வருகிறார். இந்த முயற்சிக்கு மன்றத்தின் சார்பில் முழு ஒத்துழைப்பு கொடுக்க முடிவு செய்யபட்டுள்ளது.
இது குறித்த கருத்து பரிமாற்றம் காண = டிஸ்கசன் போர்டு லிங்க்கு = இங்கு அழுத்தவும்
காயலர்களின் சந்திப்பு:
அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாகாணத்தில் வசித்து வரும் காயலர்கள் அனைவரும், இன்ஷா அல்லாஹ், வரும் ஜனவரி கடைசி வாரத்தில் தங்கள் குடும்பத்தினருடன் சந்திப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.
அடுத்த கூட்டம்:
மன்றத்தின் அடுத்த செயற்குழு இந்த மாதத்தின் கடைசி ஞாயிறு அன்றும் மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி மாத கடைசி ஞாயிறு அன்றும் 12pm PST மணிக்கு நடத்தபடும் (அல்லாஹ் நாடினால்).
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நக்வாவின் ஈமெயில் முகவரி: northamericankwa@gmail.com
தகவல்:
சாளை முஹம்மத் முஹிய்யதீன்,
ஒருங்கிணைப்பாளர், வடஅமெரிக்க காயல் நலமன்றம் (நக்வா) |