தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் 31.12.2010 உடன் முடிவடைவதால் இந்த குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 31.12.2010க்கு பிறகு ஓராண்டு காலத்திற்கு செல்லத்தக்க வகையில் அவைகளில் இலவசமாக உள்தாள்களை
இணைக்க அரசு ஆணைகள் பிறப்பித்துள்ளது. இதன்படி உள்தாள்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளில் உள்தாள்கள் இணைக்கும் பணி 20.12.2010 முதல் (நேற்று) நியாயவிலை அங்காடிகளில் மேற்கொள்ளப்படும். நியாயவிலை அங்காடிகளில்
குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் கூடினால் அவர்களுக்கு அது இடையூறாக இருக்கும் என கருதி நியாயவிலை அங்காடிகளில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட குடும்ப அட்டைகளுக்கு உள்தாள்கள் இணைக்கும் முறையை (Staggering System) செயல்படுத்தவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி எந்த குடும்ப அட்டைகளுக்கு எந்த தேதியில் உள்தாள் இணைக்கப்படும் என்ற விவரம் சம்பந்தப்பட்ட நியாயவிலை அங்காடிகளில் ஒட்டப்பட்டிருக்கும். அதன்படி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டையை சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடைகளுக்கு எடுத்துச் சென்று உள்தாள் ஒட்டிப் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட தேதியில் உள்தாள்கள் ஒட்டிக்கொள்ள யேலாத குடும்ப அட்டைதாரர்களுக்கு உள்தாள் ஒட்டிக்கொள்ள டிசம்பர் மாதத்திலேயே தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு உள்தாள் இலவசமாக ஒட்டிக்கொடுக்கப்படும். நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் உள்தாள் இலவசமாக இணைக்கப்படும். எனவே குடும்ப அட்டைதாரர்கள் எந்தவித பதட்டமுமின்றி
அவர்களது குடும்ப அட்டைகளுக்கு உள்தாள் ஒட்டி பெற்றுக் கொள்ளவும், இப்பணி சிறப்பாக நடைபெற அவர்களது முழு ஒத்துழைப்பை வழங்கவும் அரசு கேட்டுக் கொள்கிறது.
குடும்ப அட்டைகளில் உள்தாள்கள் இணைக்கும் போது நியாயவிலை அங்காடிபணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும் அவர்கள் கோரும் தகவல்களை அவர்களுக்கு கனிவுடன் அளிக்கவும் எந்தவித புகாருக்கும் இடமின்றி இப்பணி செம்மையாக நடைபெற அவர்களது ஒத்துழைப்பை நல்கவும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் திரு Ka. பாலச்சந்திரன்
கேட்டுக்கொண்டுள்ளார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross