இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை நிறுவனம் சார்பில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்கள் அளவிலான திருக்குர்ஆன் ஓதல் - கிராஅத் சுற்றுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
மேற்படி மாவட்டங்களின் பள்ளி, கல்லூரி மற்றும் அரபிக்கல்லூரி மாணவ-மாணவியருக்காக தனித்தனிப் பிரிவாக நடத்தப்படும் இச்சுற்றுப் போட்டியின் துவக்கப்போட்டி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி கேளரங்கில் நடைபெற்றது.
போட்டிகளில், காயல்பட்டினம் நகரின் பள்ளி, கல்லூரி மற்றும் அரபிக்கல்லூரிகள் சார்பாக ஏராளமான மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்கள் பிரிவில் காயல்பட்டினத்தைச் சார்ந்த ஹாஃபிழ் ஏ.ஆர்.அப்துல் காதிர் வாஃபிக் முதலிடமும், எம்.எச்.முஹம்மத் நூஹ் இம்ரான் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
கல்லூரி மாணவர்கள் பிரிவில் எம்.என்.முஹம்மத் ஸலீம் முதலிடம் பெற்றுள்ளார்.
அரபிக்கல்லூரி மாணவர்கள் பிரிவில் ஏ.கமருத்தீன் காதிரீ மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
பள்ளி மாணவியர் பிரிவில், ஜீனத் முனவ்வரா முதலிடமும், உம்மு உமாரா இரண்டாமிடமும், ஃபாத்திமா ஃபஸீஹா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
அரபிக்கல்லூரி மாணவியர் பிரிவில், ஃபாத்திமா பஸரிய்யா முதலிடமும், ஸெய்யித் அஜீபா இரண்டாமிடமும், முத்து ரியாஸ் ஃபாத்திமா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
போட்டிகளின் நிறைவில் அனைவருக்கும் மதிய உணவு விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
போட்டிகளில் வென்ற காயல்பட்டினம் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மாணவ-மாணவியரும், 27.12.2010 அன்று கீழக்கரையில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
தகவல் மற்றும் படங்கள்:
ஹாஃபிழ் A.W.முஹம்மத் அப்துல் காதிர் புகாரீ,
காயல்பட்டினம். |