இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல் கோபுரங்களிலும் கதிர்வீச்சு அளவை - அந்த மொபைல் கோபுர உரிமையாளர்களே - பரிசோதித்து, சுய சான்றிதழ் வழங்கிக்கொள்ள வேண்டும். அவைகளில் கதிர்வீச்சு அளவு ஐக்கிய நாடு சபை அறிவித்த அளவிலும், உலக சுகாதார மையம் அங்கிகரித்த அளவிலும் இருக்க வேண்டும்.
இவ்வளவுக்கு மீறி கதிர்வீச்சு இருக்குமேயானால் அந்த மொபைல் கோபுர உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும். இந்தியா முழுவதும் இதுகுறித்த பரிசோதனைகள் மேற்கொள்ள உரித்த அரசு துறைக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிநுட்ப மற்றும் தொலைதூர தொடர்பு இணை அமைச்சர் சச்சின் பைலட் நேற்று தெரிவித்தார்.
இந்த கதீர்வீச்சு குறித்து இந்திய அரசு மிகுந்த அக்கறை எடுப்பதாகவும், இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொது மக்கள் தங்கள் அச்சத்தை அரசுக்கு தெரிவித்தவண்ணம் இருப்பதாகவும், ஆகவே அதுகுறித்து முழு கவனம் அரசு எடுத்துக்கொள்ளும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். வரம்பை மீறும் மொபைல் கோபுர உரிமையாளர்களுக்கு - கோபுரம் ஒன்றுக்கு ரூபாய் 5 லட்சம் என அபராதம் விதிக்கப்படும்.
இந்தியாவில் மொத்தம் 5,60,000 மொபைல் கோபுரங்கள் உள்ளன. அவைகளில் இதுவரை 4,16 ,000 கோபுரங்களே சுய சான்றிதழ் பெற்றுள்ளன.
தகவல்:
தி ஹிந்து |