காயல்பட்டினம் யூஃபா ஜுனியர்ஸ் விளையாட்டு அமைப்பின் சார்பில், தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக, தென்மாவட்ட அளவிலான கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில், யூஃபா ஜுனியரஸ் அமைப்பு சார்பில், தென்மாவட்ட அளவிலான 5ஆம் ஆண்டு கால்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள், வருகின்ற டிசம்பர 25ஆம் தேதி முதல் டிசம்பர 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இப்போட்டிகளில் காயல்பட்டணத்தைச் சாரந்த யூஃபா ஜுனியரஸ், காலரி பேரட்ஸ், காயல் யுனைடெட் அணியினரும்,
பியர்ல் சிட்டி - தூத்துக்குடி, டி.சி.டபிள்யு. சாகுபுரம், நெல்லை யூத் - திருநெல்வேலி மர்காஷிஸ் கல்லூரி - நாசரேத், பட்டணம் ஸ்ட்ரைக்கர்ஸ் - வீரபாண்டியபட்டணம் ஆகிய அணியினரும் பங்குபெறுகின்றன.
துவக்கப்போட்டிக்கு, லண்டன் டாக்டர் எஸ்.ஓ.செய்யித் அஹ்மத் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக, காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயலர் பேராசிரியர் சதக்கு தம்பி கலந்துகொள்கிறார்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை யூஃபா ஜுனியர்ஸ் போட்டிக் குழுவினர் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
யூஃபா ஜூனியர்ஸ் சார்பாக,
எஸ்.பி.பி.புகாரீ,
காயல்பட்டினம். |