உள்ளாட்சி அமைப்பு விதிகளின்படி மூன்றாம் நிலை நகராட்சி வரை நிர்வாக அதிகாரியே (Executive Officer) நிர்வகிக்க வேண்டும். இரண்டாம் நிலை நகராட்சி மற்றும் அதற்கு மேல் தரமுயர்த்தப்படும் உள்ளாட்சி அமைப்புகளை ஆணையாளர் (Commissioner) நிர்வகிக்க வேண்டும் என சட்டம் உள்ளது.
காயல்பட்டினம் இதுவரை மூன்றாம் நிலை நகராட்சியாக இருந்து வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அது இரண்டாம் நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டதையடுத்து, நகராட்சியின் புதிய ஆணையாளராக கடந்த 16.12.2010 முதல் எஸ்.விஜயராகவன் என்பவரை சென்னையிலுள்ள நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் நியமித்துள்ளார்.
தகவல்:
மு.அ.கஸ்ஸாலி மரைக்கார்,
துணைத்தலைவர்,
காயல்பட்டினம் நகராட்சி மன்றம்.
1. Congragulation. Mr. S. Vijayaragavan posted byS.T. LABEEB (TSUTIN, LA, USA)[18 December 2010] IP: 99.*.*.* United States | Comment Reference Number: 1668
We expect justified service from you and in advance we wish you all success in our native post.
2. வாழ்த்துக்கள்!!! posted byN.S.E. மஹ்மூது (Yanbu, Saudi Arabia)[18 December 2010] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1671
வாழ்த்துக்கள்!!!
வருக , வருக திரு. விஜய ராகவன் அவர்களே! தங்கள் வரவு நல்வரவாகுக!!
எங்கள் ஊர் நகராட்சியின் ஆணையாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
தாங்கள் எங்கள் ஊரின் கலாச்சாரத்திற்கு பங்கமில்லாமல் அதே நேரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு தங்கள் பணியைத் துவங்கி
தாங்களும் நல்ல பெயர் எடுத்து எங்கள் ஊருக்கும் நல்லது செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross