DCW உடைய Caustic Soda பிரிவில் உற்பத்தியாகும் மற்றொரு முக்கிய பொருள் Synthetic Rutile ஆகும். இதற்கு Upgraded Ilmenite என்ற
மற்றொரு பெயரும் உண்டு. Synthetic Rutileக்கு மூல பொருள் Ilmenite ஆகும். Ilmenite கடல் மண்ணில் இருந்து பெறப்படும் கனிமம்
(Mineral). இந்தியாவில் கேரளா, தென் தமிழகம் மற்றும் ஒரிசா மாநிலங்களிலும் Ilmenite உள்ளது.
DCW - தன் Synthetic Rutile தொழிற்சாலைக்கு தேவைப்படும் Ilmenite யை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மனவாலங்குறிச்சி என்ற
கிராமத்தில் உள்ள Indian Rare Earths Limited என்ற இந்திய அரசாங்கத்தின் நிறுவனத்திடம் இருந்து வாங்குகிறது. Ilmenite ஒரு கதிர்வீச்சு
(Radioactive) தன்மை கொண்ட பொருள் ஆகும். இந்த (Synthetic Rutile) தொழிற்சாலை தான் ஐந்து மாதங்களுக்கு (ஆகஸ்ட் 1996 முதல் ஜனவரி 1997 வரை) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவு பெயரில் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மனவாலங்குறிச்சி உட்பட அருகில் உள்ள சில கிராமங்களில் Ilmenite தவிர பிற கனிமங்கள் (Minerals) [Rutile, Zircon, Monazite போன்ற]
எடுக்கப்படுகின்றன. மண்ணில் இருந்து இக்கனிமங்களை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பல மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் அமுதன் என்ற இயக்குனர் Radiation Stories என்ற பெயரில் மனவாலங்குறிச்சியை மையமாக
வைத்து ஒரு ஆவணப்படம் வெளியிட்டிருந்தார். அதில் அவ்வூரில் புற்று நோயால் அவதிப்படும் பலரின் கதையை படம்பிடித்துள்ளார். இந்த
ஆவணப்படம் குறித்த தி ஹிந்து நாளிதழ் செய்தி இங்கே. தெஹல்கா செய்தி இங்கே.
மனவாலங்குறிச்சியிலிருந்து பெறப்படும் Ilmenite யை நிலக்கரிக்கொண்டு (Coke) DCW இல் வறுக்கபடுகிறது (roasted). பின்னர் Hydrochloric
Acid மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. பின்னர் அது கழுவப்பட்டு, மீண்டும் சுடவைக்கப்பட்டு (Calcinated) - 95% Titanium Dioxide கொண்ட
Upgraded Ilmenite பெறப்படுகிறது. இது பொடிபோல் செய்யப்பட்டு (2 microns) Titox என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
இம்முறையின் கழிவில் இருந்து (liquor) - வேறு விதத்தில் Titanium Dioxide உற்பத்தி செய்யப்பட்டு Utox என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
இத்தொழிற்சாலையின் (Synthetic Rutile) உற்பத்தியை பெருக்கி - இதன் கழிவிலிருந்து (Liquor) Ferrite Grade Iron Oxide தயாரிக்கும் தொழிற்சாலை கட்ட 2006
ஆம் ஆண்டு DCW அனுமதி பெற்றுள்ளது. இதற்கான தொழில்நுட்பம் பெரும் ஒப்பந்தத்தில் இத்தாலி நாட்டு நிறுவனம் Rockwood Italia உடன் DCW -
சமீபத்தில் கையெழுத்திட்டது. ஏற்கனவே Yellow Iron Oxide என்ற பொருளை இதன் கழிவிலிருந்து DCW தயாரித்து வருகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross