இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மாநாடு 11.12.2010 அன்று நடைபெற்றது. அன்று காலையில் நடைபெற்ற மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு கருத்தரங்கில், தமிழகத்தின் முன்மாதிரி மஹல்லா ஜமாஅத்துக்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மஹல்லா கட்டுக்கோப்பு, பைத்துல்மால், ஷரீஅத் பஞ்சாயத்து, வட்டியில்லா கடன் உதவி, ஏழை-எளிய மாணவர்கள் கல்வி உதவி, ஏழை குமர் திருமண உதவி, திருமண, பிறப்பு - இறப்பு பதிவேடுகள் பராமரித்தல் உள்ளிட்ட விஷயங்களில் அனைத்து மஹல்லாக்களுக்கும் முன்மாதிரியாக செயல்படக்கூடிய மஹல்லா ஜமாத்துக்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து கீழ்க்காணும் 10 மஹல்லா ஜமாஅத்துக்கள் தேர்வு செய்யப்பட்டன.
1. மஸ்ஜிதே அன்வர், ராஜ கீழ்பாக்கம் - செம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.
2. அல்-மஸ்ஜிதுல் முஷர்ரப் (சின்னப்பள்ளி) பழவேற்காடு, திருவள்ளூர் மாவட்டம்.
3. பங்காளித் தெரு மஹல்லா, உரையூர், திருச்சி மாவட்டம்.
4. ஏழுலெப்பை ஜாமிஆ மஸ்ஜித் மஹல்லா, நாகூர், நாகை மாவட்டம்.
5. அய்யம்பேட்டை சக்கராபள்ளி முஸ்லிம் பரிபாலன சபை, அய்யம்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
6. அஹ்லே சுன்னத் ஜமாஅத் நீலிக்கொல்லை மஸ்ஜித் வாணியம்பாடி, வேலூர் மாவட்டம்.
7. நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நவாபு ஜாமிஆ மஸ்ஜித், விருதாச் சலம், கடலூர் மாவட்டம்.
8. குலசேகரம் முஸ்லிம் ஜமாஅத், குலசேகரம், கன்னியாகுமரி மாவட்டம்.
9. ஜாமிஆ பள்ளி வாசல்-டபிள்யூ. ஜி.சி.ரோடு தூத்துக்குடி
10 மஸ்ஜிதே கபீர் ஜும்ஆ பள்ளி, கைலாசபுரம், திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி மாவட்டம்.
மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டின்போது, தேர்வு செய்யப்பட்ட இந்த மஹல்லா ஜமாஅத்துக்களுக்கு சமுதாய புரவலர்கள், வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கக் கூடிய பிரதிநிதிகள் விருதுகளை வழங்கினர்.
நன்றி:
முஸ்லிம் லீக் வலைதளம் |