| |
செய்தி எண் (ID #) 5250 | | | சனி, டிசம்பர் 11, 2010 | DCW: பாகம் 10 - 2006இல் நகராட்சி புறக்கணிக்கப்பட்டதா? | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 3489 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் அமைக்கப்படும்போது அவைகளுக்கு மாநில அரசாங்கத்திடம் இருந்தும், மத்திய அரசாங்கத்திடம் இருந்தும் அனுமதி
பெறுமுன் - தொழிற்சாலை வளாகத்திலோ, தொழிற்சாலைக்கு அருகில் உள்ள இடத்திலோ மக்கள் கருத்து (Public Hearing) நடத்தப்பட வேண்டும்
என்பது சட்டம். DCW குறித்த பாகம் 9 செய்தியில் தூத்துக்குடியில் செப்டம்பர் 14, 2006 அன்று நடந்த மக்கள்
கருத்து கேட்கும் நிகழ்ச்சி குறித்து கண்டோம். அக்கருத்து சேகரிக்கும் நிகழ்ச்சியில் DCW, Sterlite போன்ற தொழிற்சாலைகள் தங்களின் புதிய
திட்டங்கள் குறித்த விளக்கங்களை அளித்தன.
இந்த மக்கள் கருத்து நிகழ்ச்சியில்தான் DCW தன் புதிய திட்டங்கள் (Mercury Cell இல் இருந்து Membrane Cell க்கு
மாற்றம், உற்பத்தி திறன் அதிகரிப்பு, Ferric Oxide தொழிற்சாலை, நிலக்கரி கொண்டு புதிய 50 MW மின்நிலையம்) குறித்த விளக்கங்களை
அளித்தது.
இந்த மக்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் என்ன வினோதம் என்றால் - அன்று தான் (செப்டம்பர் 14, 2006)
மத்திய அரசு Environment (Protection) Act, 1986 சட்டத்தின் கீழ் புதிய வழிமுறைகளை அறிவிக்கிறது (ENVIRONMENT IMPACT ASSESSMENT - 2006). ஆகவே செப்டம்பர் 14, 2006 அன்று நடந்த
மக்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி ENVIRONMENT IMPACT ASSESSMENT -
1994 உடைய விதிகளின்படி நடந்தது.
ENVIRONMENT IMPACT ASSESSMENT - 1994 விதிகள் மக்கள் கருத்து
கேட்கும் முறை குறித்து என்ன கூறுகின்றன?
--- அரசு ஒப்புதல் (Environmental Clearance) பெற விரும்பும் நிறுவனங்கள் - ஆங்கிலத்திலும், பகுதியில் பேசப்படும் மொழியிலும்
திட்ட சாராம்சம் (Executive Summary) மற்றும் அத்திட்டத்தால் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் தாக்க மதிப்பீடு (Environmental Impact
Assessment Report) ஆகியவற்றின் 20 நகல்களை மாநில மாசு கட்டுப்பாடு அமைப்புக்கு (STATE POLLUTION CONTROL BOARD) கொடுக்க
வேண்டும்
--- மாநில மாசு கட்டுப்பாடு அமைப்பு குறைந்தது இரு பரவலாக படிக்கப்படும் நாளிதழ்களில் (அதில் ஒன்று உள்ளூர் மொழியாக இருக்கவேண்டும்) -
அந்த திட்டம் குறித்த தகவலையும், அதனை விவாதிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், நாள், நேரம் ஆகியவற்றையும் தெரிவிக்கவேண்டும்
--- இந்த மக்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சிக்கு அரசுசாரா தன்னார்வ அமைப்புகள் (NGOs), தனி நபர்கள் என யாரும் கலந்துகொண்டு தங்கள்
கருத்தை எழுத்துபூர்வமாகவோ, வாய்மொழியாகவோ வழங்கலாம்
--- கருத்து கேட்கும் குழுவில் மாநில மாசு கட்டுப்பாடு அமைப்பு சார்பாக பிரதிநிதி, மாவட்ட ஆட்சியர் அல்லது அவரின் பிரதிநிதி, இந்த விசயத்தில்
தொடர்புள்ள மாநில அரசாங்கத்தின் பிரதிநிதி, மாநில அரசின் சுற்றுப்புற சூழல் குறித்த துறையின் பிரதிநிதி, பஞ்சாயத் அல்லது நகராட்சியின்
பிரதிநிதிகள் மூன்று பேருக்கு கூடாமல், அந்த பகுதியின் - மாவட்ட ஆட்சியரால் தேர்வு செய்யப்பட்ட மூத்தவர்கள் (Senior Citizens) மூன்று பேருக்கு கூடாமல்
ஆகியோர் கொண்டு அமைக்கலாம்
--- திட்ட சாராம்சம் (Executive Summary) மற்றும் அத்திட்டத்தால் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் தாக்க மதிப்பீடு (Environmental Impact
Assessment Report) நகல்கள் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட தொழில் மையத்திலும், உரித்த பஞ்சாயத்/நகராட்சி
அலுவலகத்திலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையகம் மற்றும் மாவட்ட அலுவலகத்திலும், மாநில சுற்றுப்புற சூழல் குறித்த
அமைச்சகத்தின் அலுவலகத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவேண்டும்
--- தொழிற்சாலையிலிருந்து விண்ணப்பம் பெறப்பட்ட 60 நாட்களுக்குள் மக்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்படவேண்டும்
இந்த விதிமுறைகளை முழுமையாக ஆங்கிலத்தில் காண இங்கு அழுத்தவும்
நகராட்சியில் விசாரித்ததில் DCW குறித்த எந்த தகவலும் இந்த காலகட்டத்தில் வரவில்லை என தெரிவித்துள்ளார்கள். DCW காயல்பட்டின நகராட்சி எல்லைக்குள்ளேயே உள்ளது. சாஹுபுரம் என தனியாக PIN Code பெற்றுகொண்டாலும், பல பத்திரிக்கை மற்றும் தஸ்தாவேஜுகளில் ஆறுமுகநேரி அல்லது ஆறுமுகநேரி P .O. என குறிப்பிடப்பட்டாலும் - DCW - ஆண்டுக்கு சுமார் 15 லட்ச ரூபாய் காயல்பட்டின நகராட்சிக்கு சொத்து வரியாகவும் (Property Tax), தொழில் வரியாகவும் (Professional Tax) கட்டிவருகிறது.
விதிகளின்படி திட்ட நகல் நகராட்சிக்கு கொடுக்கப்பட வேண்டும். அது நடக்கவில்லை என கூறப்படுகிறது. திட்ட நகல் நகராட்சியில் மக்கள்
பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். (நகல் பெறப்படாததால்) அதுவும் நடக்கவில்லை. மக்கள் கருத்து கேட்கும் குழுவில் நகராட்சிக்கு தொடர்புடைய
மூவர் (வரை) இருக்கலாம். அதுவும் நடக்கவில்லை.
சுற்றுபுற சூழலில் மாசு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள சட்டம் பல வழிகள் தருகிறது. அவைகளில் பல ஓட்டைகள் இருந்தாலும், இருக்கும்
வழிகளை நாம் DCW விசயத்தில் பயன்படுத்தவில்லை என்பதே நிஜம்.
சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் நரனமள்புரம் கிராமத்தில் India Cements நிறுவனம் 48 MW அளவில் அனல் மின்நிலையம் அமைக்க அனுமதி கேட்டிருந்தது. அது குறித்த மக்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி ஜூலை 31, 2010 அன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிக் குறிப்புகள் (MINUTES) காண இங்கு அழுத்தவும்
[தொடரும்]
காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|