கரைந்து வரும் கனவாய் என்ற தலைப்பில் தாயிம்பள்ளிவாசலையொட்டிய மூப்பனார் ஓடை குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது குறித்து காயல்பட்டின நகராட்சி துணைத் தலைவர் எம்.ஏ. கஸ்ஸாலி மரைக்கார் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
தாயிம்பள்ளி மூப்பனார் ஓடை தாயிம்பள்ளி பாலத்திலிருந்து கே.எம்.டி. ஓடைவரை 340 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் ஓடையும், ஹாபிழ் அமீர் பள்ளிவாசல் குறுக்கு ரோட்டில் ஒரு பாலமும் அமைத்திட ரூ 8,75,000 மதீப்பீட்டில் நவம்பர் 5 ஆம் தேதி பணி தொடங்கப்பட்டது. இன்று வரை இம்மொத்த பணியில் 50 சதவித பணி மட்டுமே முடிந்துள்ளது.
மேலும் இப்பிரதான செய்தியை தகவல் தெரிவித்தவர் 20அடி கால்வாய் கனமழையில் கரைந்து விட்டதாக கூறியது அறியாமையாகும். மேற்காணும் 20 அடி நீளத்திற்கு மட்டும் விட்டுவிட்டு மீதி பகுதிக்கு கால்வாய் போடப்பட்டது. ஏன்என்றால் தென்பகுதியில் கால்வாய் போட்டு முடிக்கப்பட்ட பகுதிகளில் ஆழமாக தோண்டப்பட்டு மண்னை நிரப்புவதற்காக ஜேசிபி இயந்திரம் அவ்வழியே கொண்டு செல்ல இவ்விடம் விடப்பட்டு இருந்தது.
தென்பகுதி கால்வாய்பணி முடியுற்றதும் இவ்வழியே ஜேசிபி இயந்திரம் உதவியுடன் பள்ளங்கள் சரிசெய்யப்பட்ட பிறகு, இந்த 20அடி பகுதியில் கடந்த 6 நாட்களுக்கு முன் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் 7 நாட்கள்கூட முழுமையாகாத நிலையில் இப்பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் சிமென்ட்கலவை போட பயன்படுத்திய சென்டிங் பலகையை நீக்கியுள்ளார். கடந்த 5 நாட்களாக கனமழை பொழிந்துள்ளதால் சிமென்ட்கலவை உறுதியாக இல்லாமல் இருந்துள்ளது. மேலும் இந்த 20 அடி கால்வாய் பகுதியில் ஆழமாக தோன்டப்பட்ட மண்னை நிரத்துவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணை நிரத்தியுள்ளார் இப்போது அந்த 20 அடி கால்வாய் பகுதி மட்டும் சரிந்து விட்டது. இதுஒரு விபத்தேயன்றி விவகாரம்யில்லை. இவ்விழப்பீடு ஒப்பந்ததார்ரேயே சாரும்.
நகராட்சியில் இதுவரை இப்பணிகள் செய்தமைக்காக எவ்விதமான பணபட்டுவாட செய்யப்படவில்லை. ஆதலால் நகராட்சிக்கோ பொது மக்களுக்கோ எவ்வித இழப்பும் ஏற்படவில்லை. மேலும் இவ்விதமான அஜாக்கரதையாக பணி செய்தமை வன்மையாக கண்டிக்கதக்கது. மேலும் இதுவரை செய்யப்பட்ட கால்வாய் பணிகளின் உறுதிதன்மையை சோதனை செய்யும்படி நகராட்சி பொறியாளர், நகராட்சி மேற்பார்வை பொறியாளர், மற்றும் பொறியியல் உதவியாளர்களை கொண்டு சோதனையிட பணிக்கப்பட்டுள்ளது. மற்றும் சிமென்ட் கலவை குறித்து ஆய்வகங்களுக்கு அனுப்பி பரிசோதிக்க உத்திரவிடப்பட்டுள்ளது. ஆகவே இக்கால்வாய்பணி முடியுற்றதும் 100 சதவிகிதம் பரிசோதனைக்குட்பட்டும், நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றம் நகர்மன்றஉறுப்பினர்கள் அனைவரும் இப்பணியை பார்வையிட்டு அனைவர்களும், கால்வாயின் உறுதிதன்மை அறிந்தபிறகே, சோதனையில் உறுதிசெய்யப்பட்டு செய்த பணிக்கு பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்து.
இவ்வாறு நகராட்சி துணைத் தலைவர் எம்.ஏ. கஸ்ஸாலி மரைக்கார் விளக்கம் அளித்துள்ளார்.
|