சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 22, 29ம் தேதி மற்றும் ஜனவரி 5ம் தேதிகளில் மங்களூருக்கு சிறப்பு ரயில்(வ.எண்.06667) இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.45 மணிக்கு மங்களூரை சென்றடையும். மறுமார்க்கம் மங்களூரில் இருந்து 23,30 மற்றும் ஜனவரி 6ம் தேதிகளில் மாலை 4.20 மணிக்கு சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் (06668) இயக்கப்படுகிறது.
அதே போல், எழும்பூரில் இருந்து ஜனவரி 10ம் தேதி இரவு 6.50 மணிக்கு தூத்துக்குடிக்கும் (06137), தூத்துக்குடியில் இருந்து ஜனவரி 11ம் தேதி மதியம் 2.55 மணிக்கு எழும்பூருக்கும் சிறப்பு ரயில்(06138) இயக்கப்படுகிறது. மேலும், சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 12ம் தேதி இரவு 11.30 மணிக்கு தூத்துக்குடிக்கும் (06139), தூத்துக்குடியில் இருந்து 13ம் தேதி மாலை 5 மணிக்கு எழும்பூருக்கும் சிறப்பு ரயில் (06140) இயக்கப்படுகிறது.
எழும்பூர் - தூத்துக்குடி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச லம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, மீளவிட்டான் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது. இத்தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தகவல்:
தினகரன் |