நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக வள்ளியூருக்கும் காவல்கிணறுக்கும் இடையே லெப்பைகுடியிருப்பு பகுதியில் அரை கி.மீ தூரத்திற்கு தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் நெல்லை - நாகர்கோவில் வழித்தடத்தில் 6 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் விடிய விடிய பெய்த மழை காரண மாக வள்ளியூர் & காவல்கிணறு இடையே உள்ள லெப்பைகுடியிருப்பு பகுதி யில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளத்தில் போடப்பட்டிருந்த ஜல்லி கற்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும் தண்டவாளம் நீரில் மூழ்கியது.
சென்னையிலிருந்து குமரி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அதி காலை 5.45 மணியளவில் லெப்பை குடியிருப்பு பகு தியை கடந்த போது வழக்கத்துக்கு மாறாக அதிகம் அதிர்வு இருப்பதை அறிந்த இன்ஜின் டிரைவர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித் தார்.
ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அரை கி.மீ. தூரத்திற்கு தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனால் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் செங்குளத்திலும், நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ஆரல்வாய்மொழியிலும், நாகர்கோவில் - கோவை பயணிகள் ரயில் நாகர்கோவிலி லும், சென்னை & நாகர்கோ வில் சிறப்பு ரயில் நாங்குநேரியிலும், ஹவுராவிலிருந்து - குமரி செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் நெல்லையிலும் நிறுத்தப்பட்டன. நெல்லையிலிருந்து காலை 8 மணிக்கு நாகர்கோவில் செல்லும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டது.
மழை குறைந்ததை தொடர்ந்து தண்டவாளத் தில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு அரிப்பு ஏற்பட்ட ரயில் பாதை சரிசெய்யப்பட்டது. பின்னர் நேற்று மதியம் 12 மணியளவில் நெல்லை - நாகர்கோவில் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து துவங்கியது.
குமரி மாவட்டம் குழித் துறை - பள்ளியாடி இடையே தண்டவாளத்தில் மண் சரிவு காரணமாக திருவனந்தபுரம் - நாகர்கோவில் ரயில் ரத்து செய்யப்பட்டது. மதுரை & கொல்லம் பயணி கள் ரயில் இரணியலிலும், திருவனந்தபுரம் வழியாக மும்பை செல்லும் எக்ஸ்பி ரஸ் நாகர்கோவிலும் நிறுத்தப்பட்டன.
குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் குரு வாயூர் எக்ஸ்பிரஸ் குழித்துறையுடன் நிறுத்தப்பட்டு சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டது. நடுவழி யில் ரயில்கள் நிறுத்தப்பட்டதாலும், ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஹவுரா ரயிலில் வந்த பயணிகளை நெல்லையிலிருந்து 7 சிறப்பு பஸ்கள் மூலம் நாகர்கோவில், குமரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
செங்குளத்தில் நின்ற அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பயணிகள் 3 பஸ்கள் மூலம் நாகர்கோவிலுக்கு அனுப்பப்பட்டனர்.
தண்டவாள அரிப்பு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து மும்பை, குமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ்கள், சென்னை சிறப்பு ரயில்கள் புறப்பட்டன. இருப்பினும் சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நேற்று மாலை நாகர்கோவிலிருந்து 6.15 மணிக்கு இயக்கப்பட்டது. இதே போல் சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
பின்னர் அந்த ரயில் திருச்சியிலிருந்து சென் னைக்கு திரும்பி செல்லும். நாகர்கோவில் & கோவை எக்ஸ்பிரஸ் இரவு 8.30 மணிக்கு பதில் 10.30 மணிக்கு புறப்பட்டது.
தகவல்:
தினகரன் |