அமீரக மன்றம் விரைவில் வெளியிடவிருக்கும் சிறப்பு மலருக்கான உலக காயலர்களின் படைப்புகள் வந்து சேர டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என, மலர்க்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மலர்க்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சாளை ஷேக் ஸலீம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அனைத்து காயலர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ் வெளிவரவிருக்கும் மலருக்கான தங்களது மேலான படைப்புகளை kayaluae.souvenir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பித் தருமாறு மலர்க்குழுவின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தமது படைப்புகளை நேரில் சமர்ப்பிக்க விரும்புவோர், ஜனாப் ஆசாத் (கைபேசி எண்: 050 2766034 ) அல்லது ஜனாப் கே.வி.மொகுதூம் (கைபேசி எண்: 050 - 5756713 ) ஆகியோரைத் தொடர்புகொண்டு, துபையில் ஒப்படைக்க வேண்டுகிறேன்.
*** படைப்புகள் கவிதை, கட்டுரை, துணுக்கு, ஜோக், செய்தி அல்லது வேறு எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
*** படைப்புகள் அனைத்தும் தத்தம் சொந்த ஆக்கமாக இருக்க வேண்டும். பிறரது படைப்பைக் கையாளும்போது அதன் விபரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
*** அமீரகத்தில் வாழும் காயலர்களின் தகுதியான படைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
*** படைப்புகளை சுருக்கவோ, திருத்தவோ, நிராகரிக்கவோ மலர்க்குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு.
*** மார்க்கம் சார்ந்த படைப்புகளில் சர்ச்சைக்கு இடமில்லாதவை மட்டுமே பரிசீலித்து பிரசுரிக்கப்படும்.
*** குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தமது படைப்புகளை அனுப்பித் தரலாம்.
*** சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
*** படைப்புகளை அனுப்புவோர், ஸ்கேன் செய்யப்பட்ட தமது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் .jpg ஃபைலாக அனுப்பித் தர வேண்டியது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கவிமகன் காதர்,
மலர்க்குழு துணை ஒருங்கிணைப்பாளர்,
அமீரக காயல் நல மன்றம்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |