Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:12:23 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5214
#KOTW5214
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 8, 2010
மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம்: கவிக்கோ!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3181 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில், மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ எஸ்.அப்துல்ரகுமான் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடந்தது. அந்நிகழ்ச்சி குறித்து மேலதிக விபரங்கள் பெறப்பட்டுள்ளது.

நீடுர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹூதா அரபிக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான கலந்துரையாடல் கூட்டம் கடந்த மாதம் நீடுர் நகரில் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் அமர்வு கடந்த சனிக்கிழமையன்று சென்னை அபு பேலஸ் ஹோட்டலில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் S.M. ஹிதாயத்துல்லாஹ் முன்னிலை வகித்தார்.





கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன், ஓய்வு பெற்ற IAS அதிகாரியும், காஷ்மீர் மாநில முன்னாள் தலைமை செயலாளருமான மூசா ராஜா, ஆடிட்டர் முஹம்மது, கேப்டன் அமீர் அலி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள்,பல்துறை நிபுணர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஊக்க உரை நிகழ்த்திய டாக்டர் மீர் முர் முஸ்தபா உசேன், மூசா ராஜா IAS, ஆடிட்டர் முஹம்மது, கேப்டன் அமீர் அலி ஆகியோர் பல்வேறு அரிய ஆலோசனைகளையும், துறை சார்ந்த அனுபவங்களையும் வழங்கினார்கள்.





8ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டு வரை இஸ்லாமியர்கள் பல துறைகளில் ஆண்டு வந்தார்கள். விஞ்ஞானம் என்பது இஸ்லாமியர்கள் ஐரோப்பியர்களுக்கு வழங்கிய பிச்சை. மருத்துவத்துறை நம் சமுதாயத்திற்கு புதியதும் அல்ல, மருத்துவ துறையில் தலைச்சிறந்து விளங்கிய இஸ்லாமிய சமுதாயம் தான் இன்று மிகப்பெரிய நோயாளி சமுதாயமாக இருக்கிறது, என்று பேசிய கவிக்கோ, அமையவிருக்கும் இந்த மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசுகையில், விரைவில் வேலூர் மாவட்டத்தில் ஒரு சட்டக்கல்லூரி அமையவிருக்கிறது என்றும், அலிகார் பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்று தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது போன்ற தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

கூட்டத்தில் 65 உறுப்பினர்கள் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான பங்களிப்பு காசோலைகளை வழங்கினார்கள். பரங்கிப்பேட்டை சார்பில் 6 காசோலைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் வழங்கப்பட்ட காசோலைகள் அனைத்தும் தனியார்(கள்) பெயரில் தான் அமைந்திருந்தது. அதில் விதிவிலக்காக ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்ட ஒரே காசோலை பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்டதே ஆகும். தொடர்ந்து இதுப்போன்ற ஆலோசனை கூட்டங்கள் திருநெல்வேலி, கீழக்கரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் நடைப்பெற இருக்கிறது

கூட்டத்தின் இறுதியில் வக்ஃப் வாரிய உறுப்பினர் சிக்கந்தர் நன்றியுரையாற்றினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இக்பால், சாதிக் மற்றும் நீடுர் மதரஸா நிர்வாகிகள், வக்ஃப் வாரிய ஊழியர்கள் செய்திருந்தனர்.

தகவல்:
அபு அஹமத் என்ற சோனா,
ரியாத், சவுதி அரேபியா.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Kudos to Dr. Kavikko and his team in Wakf Board !!
posted by Arabi Haja (Hong Kong ) [08 December 2010]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 1487

The Chairman of Wakf Board, Kavikko, as an academician, has took a bold and appreciable step in starting a Medical College sponsored by the Nidur Jamaat and other community philanthropists in Tamil Nadu. Thanks to all and Jazakallah Khair.

If the previous Chairman of Wakf Board Mr. Hyder Ali took a bold and proactive steps to recover Wakf lands from the hands of unauthorized occupiers for years and recovered many in this kind and thereby bring back its wealth to its fold , the present chairman proceeds in the educational upliftment of the community in Education.

He has teamed up with Dr. Mir Musthafa Hussain, former VC of Medical Varsity, Mr. Moosa Raza of retired Kashmir cadre IAS and Captain N. Ameer Ali is a formidable one which could achieve any challenge before them. Nidur Jamaat deserve all priase for its generous donation of lands required for this cause.

Hope and wish, the community will come forward en masse to contribute this noble cause and see the mega project of our community a great success.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Salute
posted by Seyed (Hong Kong) [08 December 2010]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 1492

Masha Allah, My hearty wishes to Wakh Board President Janab Kaviko Abdur Rahman.

I just simply salutes his effort for bringing a wonderful Medical college to community people. I pray Allah & Rasool (Saw) for the success. Thanks mainly to Nidur peoples for donating land and money.

Information to Kayalities - those who willing to get SHARE in this noble cause, you can join for 10 lakhs for 1 share. Many peoples bought with it and join in the board of trusty.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved