காயல்பட்டினம் நகராட்சியின் 10ஆம் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, வரும் 10.12.2010 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை, பொது வினியோகத் திட்ட குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து, 10ஆம் வார்டு உறுப்பினரும், நகர்மன்றத் துணைத்தலைவருமான எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்கார் தெரிவித்துள்ளதாவது:-
காயல்பட்டினம் நகராட்சியின் 10ஆம் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, வரும் 10.12.2010 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை, பொது வினியோகத் திட்ட குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
காயல்பட்டினம் அலியார் தெருவிலுள்ள திருச்செந்தூர் யூனியன் ஆரம்ப பாடசாலையில் நடைபெறும் இம்முகாமில், காயல்பட்டினம் 10ஆம் வார்டுக்குட்பட்ட பரிமார் தெரு, அலியார் தெரு, சின்ன நெசவுத் தெரு, திருச்செந்தூர் ரோடு, காயிதேமில்லத் நகர் ஆகிய பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் பொது வினியோகத் திட்டம் (குடும்ப அட்டை - ரேஷன் கார்டு) தொடர்பான மனுக்களை இம்முகாமில் கொடுத்து பயனடையலாம்.
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட மனுக்களுக்கு முகாம் நாளன்றே தீர்வு செய்யப்படும். புதிய குடும்ப அட்டை, முகவரி மாற்றம் முதலிய இதர மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் பதில் தெரிவிக்கப்படும்.
10ஆம் வார்டுக்குட்பட்ட மேற்படி பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை அவசியம் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தகவல்:
M.A.முஜீப்,
பரிமார் தெரு, காயல்பட்டினம். |