ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் சிறப்பு மலர் விரைவில் வெளியிடப்படவுள்ளது. அம்மலருக்கான உலக காயலர்களின் படைப்புகள் வரவேற்கப்பட்டுள்ளது.
மலர் வெளியீட்டு விழாவின்போது, மன்றத்திற்கான இலச்சினையும் (லோகோ) வெளியிட்டு அறிமுகம் செய்யப்படவுள்ளது. சிறந்த இலச்சினையைப் பெற்றிடும் பொருட்டு, மன்றத்தின் மலர்க்குழுவின் சார்பில் இலச்சினை உருவாக்கப் போட்டி நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து, அமீரக காயல் நல மன்றத்தின் மலர்க்குழு ஒருங்கிணைப்பாளர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அனைத்து காயலர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அமீரக காயல் நல மன்றத்திற்காக இலச்சினை (Logo) ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற நெடுநாள் ஆதங்கத்தை நீக்குமுகமாக, இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரவிருக்கும் எமது சிறப்பு மலருடன் சேர்த்து, புதிய இலச்சினையையும் வெளியிட்டு அறிமுகப்படுத்தவிருக்கிறோம்.
இந்த புதிய இலச்சினையை உருவாக்க ஆர்வமும் சிந்தனை திறனும் கொண்ட அனைத்து காயலர்களும் எம்மோடு ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறேன்.
அன்பு, சகோதரத்துவம், மனிதநேயம், அமீரகம், அரபு / இஸ்லாமிய கலாச்சாரத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்படும் சிறந்த இலச்சினை எமது நிர்வாகக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசினை வழங்குவதோடு இந்த இலச்சினையையே அமீரக காயல் நல மன்றத்தின் அதிகாரப்பூர்வ இலச்சினையாக ஏற்றுக்கொள்ளும் கவுரவத்தையும் வழங்கவிருக்கிறோம்.
உங்களின் மேலான ஆக்கங்களை தயவுசெய்து kayaluae.souvenir@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனுப்பித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இலச்சினைகளை உருவாக்கி அனுப்பும் அன்பர்கள், தயவுசெய்து இலச்சினையை பலவண்ண அமைப்பில் உருவாக்கி, இலச்சினையை குறித்த தமது விளக்கங்களையும் இணைத்து அனுப்புமாறும், ஸ்கேன் செய்யப்பட்ட தமது பாஸ்போர்ட் அளவு படத்தையும் இணைத்தனுப்புமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
கவிமகன் காதர்,
மலர்க்குழு துணை ஒருங்கிணைப்பாளர்,
அமீரக காயல் நல மன்றம்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |