| |
செய்தி எண் (ID #) 5225 | | | புதன், டிசம்பர் 8, 2010 | DCW: பாகம் 9 - அரசன் அன்றே கொல்வான்! Mercury நின்று கொல்லும்?! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 4051 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய | |
2006 ஆம் ஆண்டு செப்டம்பரில், அதன் புதிய திட்டங்கள் குறித்து தூத்துக்குடியில் நடந்த மக்கள் கருத்து அறியும் நிகழ்ச்சியில் DCW பங்குபெற்றது.
அப்போது Caustic Soda உற்பத்தியை Mercury Cell முறையில் இருந்து Membrane Cell முறைக்கு மாற்றவும், புதிய Ferric Oxide
தொழிற்சாலை நிறுவவும், நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யவும் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டது. அது குறித்த செய்தி அப்போது தி
ஹிந்து நாளிதழில் வந்திருந்தது. பார்க்கவும்
இங்கே.
அரசு ஒப்புதல்கள் பெற்ற பின் - 2007 ஆம் ஆண்டு டிசம்பரில், DCW - Caustic Soda உற்பத்தி செய்ய Membrane Cell முறைக்கு மாறியது. புதிய
முறையில் கழிவாக (Caustic Soda உற்பத்தியினால்) Mercury கடலில் சேர வாய்ப்பு இல்லை. இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றாலும் -
Mercury-ன் தன்மையும், அது பிற நாடுகளில் ஏற்படுத்தி உள்ள விளைவுகளும் நம்மை Mercury மூலம் பிரச்சனை முடிந்து விட்டதா என கேள்வி
கேட்க வைக்கின்றது.
மினமாட்டா என்பது ஜப்பானில் மீன்தொழில் மேலோங்கிய ஒரு சிறிய கிராமம். இங்கு 1908 ஆம் ஆண்டு Chisso Corporation என்ற தொழிற்சாலை
நிறுவப்பட்டது. துவக்கத்தில் Nitrogen போன்றவை அங்கு தயாரிக்கப்பட்டது. அந்த தொழிற்சாலையின் கழிவுகள் கடலுக்கு அனுப்பப்பட்டன.
தொழிலுக்கு கழிவினால் பாதிப்பு ஏற்படுவதை கண்டு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்களுக்கு - அவர்களை அமைதி படுத்த - பண உதவி செய்யப்பட்டது.
Chisso நிறுவனத்தை பொறுத்தவரை - பாதுக்காப்பான முறையில் கழிவை வெளிப்படுத்துவதை விட மீனவர்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பது
சிக்கனமாக தெரிந்தது.
கடலில் சேரும் கழிவு ...
Chisso நிறுவனம் 1932 ஆம் ஆண்டு முதல் Acetaldehyde என்ற திரவத்தை Mercury கொண்டு தயாரிக்க துவங்கியது. இரண்டாம் உலக போர்
நேரத்தில் இந்நிறுவனம் பெரும் வளர்ச்சி கண்டது. ஊரில் பலர் அந்நிறுவனத்தில் சாதாரண வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டனர். அக்கிராம மக்களும்
தங்கள் வாழ்க்கை தரத்தில் உயர்வு கண்டனர்.
நிலைமை 1950 களில் மாறியது. ஊரில் திடீரென புது விதமான நோய் தோன்ற துவங்கியது (பிற்காலங்களில் அந்த ஊரின் பெயரில் மினமாட்டா நோய் என்று பரவலாக
அழைக்கப்பட்டது). மருத்துவர்கள் உடலின் நரம்பு அமைப்பு பாதிக்கபடுவதாக தெரித்தனர். பூனைகள் - பைத்தியம் பிடித்தது போல் ஓடி, உயிர்
விட்டன. பலரின் கண், உதடு, கால் போன்றவை பாதிக்கப்பட்டன. பலர் தாங்கள் அறியாமலேயே சத்தம் போட துவங்கினர். அவர்கள் பைத்தியம் என்
முத்திரை குத்தப்பட்டனர்.
பிறவியில் இருந்து நோயால் பாதிக்கப்பட்ட தன் 16 வயது மகளை குளிக்கவைக்கும் தாய் ...
நோயினால் காலில் ஏற்பட்ட பாதிப்புடன், அன்றைய இரவு உணவுக்காக வீட்டிற்க்கு மீன் கொண்டு செல்லும் கிராமவாசி ...
1959 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்ட அறிக்கை - நோய்களுக்கு காரணம் Chisso நிறுவனத்தின் Mercury என அறிவித்தது. அறிக்கைக்கு பின் எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்ப்பு தெரிவித்த மீனவர்களை நிறுவனம் பணியவைத்தது. சிலர் சிறு தொகை பெற்றுக்கொண்டு தாங்கள் பிற்காலங்களில் நஷ்டஈடு கேட்கமாட்டோம் என
கையெழுத்திட்டனர்.
Chisso நிறுவனம் மினமாட்டாவில் ஏற்பட்ட பாதிப்புகளில் அதன் பங்கு உள்ளது என சம்மதிக்கவில்லை. 1968 ஆம் ஆண்டு தயாரிப்பு முறை பழமை
ஆன காரணத்திற்க்காக Mercury பயன்படுத்துவதை நிறுத்தி அந்நிறுவனம் வேறு முறைக்கு மாறியது.
இறந்தவர்கள் படத்தினை ஏந்திக்கொண்டு நீதிமன்றம் முன்பு மக்கள் ...
சில ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் - 1932 முதல் 1968 வரை - Chisso நிறுவனம் கடலினை Mercury கொண்டு மாசுப்படுத்தியதே ஊரில்
ஏற்பட்ட நோய்களுக்கு காரணம் என அறிவித்தது. Mercuryயின் மற்றொரு வடிவமான Methyl Mercury மீன்களுக்குள் சென்று, அது பின்னர்
உணவாக மனித உடலுக்குள் சென்றுள்ளது.
நீதிமன்றம் மார்ச் 20, 1973 அன்று வழங்கிய தீர்ப்பின் சாராம்சம் ...
... ஒரு இரசாயன தொழிற்சாலை கழிவு நீர் வெளியேற்றும்போது மிகவும் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும்... அக்கழிவினை ஆய்வு செய்து அதில் என்ன ஆபத்தான பொருட்கள் கலந்துள்ளன என அறியவேண்டும்... அதனால் மிருகங்களுக்கு, தாவரங்களுக்கு மற்றும் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என அறியவேண்டும்... அவ்வாறு ஆபத்து உண்டு என்றால் உடனடியாக தொழிற்சாலை செயல்பாடுகளை தானாகவே நிறுத்தி ஆராயவேண்டும்... ஒரு காலமும் அருகில் உள்ள மக்களின் உயிர் மற்றும் உடல் நலனையும் மீறி எந்த தொழிற்சாலையும் நடத்தப்பட அனுமதிக்ககூடாது... நிறுவனத்தினர் Acetaldehyde கழிவினை எந்தவித அக்கறையும் இன்றி கடலுக்கு விட்டிருக்கிறார்கள் ... அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு மாசு அளவு இருந்தாலும், பிற நிறுவனங்களை விட சிறந்த முறையில் கழிவினை சுத்திகரித்தாலும் கவனக்குறைவிற்க்கான தண்டனையில் இருந்து நிறுவனத்தினர் தப்ப முடியாது ...
அதிகாரப்பூர்வமாக சுமார் 3000 பேர் பாதிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது. அதில் ஏறத்தாழ 2000 பேர் இறந்தவர்கள். Chisso நிறுவனம் சுமார்
10,000 பேருக்கு நஷ்டஈடு வழங்கியுள்ளது.
புகைப்படங்கள்:
W. Eugene Smith
அமெரிக்க பத்திரிக்கை புகைப்பட நிபுணர் (1970 - 1973)
[தொடரும்]
காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|