உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில், பெறப்பட்டுள்ள ஜகாத் நிதியை கல்வி உதவித்தொகைக்காக பயன்படுத்துவதெனவும், அத்தொகையை எங்ஙணம் வழங்குவதென ஐவர் குழு கலந்தாலோசித்து முடிவெடுக்கும் எனவும் அண்மையில் நடைபெற்ற இக்ராஃ செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், நேற்று (07.12.2010) இரவு 08.30 மணிக்கு, இக்ராஃ தலைவரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமையில், இக்ராஃ அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் அக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களில் ஜகாத் நிதியைப் பெற்றிடத் தகுதியான நால்வர் கல்வி உதவித்தொகைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
பி.எட். படிக்கும் மாணவி ஒருவருக்கு ரூ.15,000 தொகையும்,
Fire Safety பயிலும் மாணவர் ஒருவருக்கு, ரூ.15,000 தொகையும்,
ஏ.சி.மெக்கானிக் பயிலும் மாணவர் ஒருவருக்கு முழுச் செலவான ரூ.10,000 தொகையும்,
சிவில் இஞ்சினீயரிங் (டிப்ளமோ) பயிலும் மாணவர் ஒருவருக்கு ரூ.5,000 தொகையும்,
ஆக மொத்தம், இக்ராஃவின் மொத்த ஜகாத் நிதியான ரூபாய் நாற்பத்தைந்தாயிரம் தொகையை மேற்கண்டவாறு வினியோகிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நியமிக்கப்பட்ட ஐவர் குழுவிலிருந்து ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி எம்.எம்.உவைஸ் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கலந்தாலோசனை செய்தனர். இக்ராஃ செயலர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், துணைச் செயலாளர்கள் கே.எம்.டி.சுலைமான், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் உடனிருந்தனர்.
முடிவெடுக்கப்பட்டபடி, மாணவ-மாணவியருக்கு இன்று இக்ராஃ அலுவலகத்தில் அத்தொகைகள் வழங்கப்படவுள்ளது.
தகவல்:
K.M.T.சுலைமான்,
துணைச் செயலாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம். |