காயல்பட்டினத்தில் நேற்று காலை 08.00 மணியளவில் தூறலாகப் பெய்த மழை, நேரம் செல்லச் செல்ல கனமழையானது. இடையிடையே சிறிய இடைவெளி விட்டுப் பெய்யும் இம்மழையின் காரணமாக நகரில் சாலைகள் அரிப்பெடுத்து பள்ளமாகக் காட்சியளிக்கிறது.
நகரின் தாழ்வுப்பகுதியான கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு, அப்பாபள்ளித் தெரு உள்ளிட்ட தெருக்களில் தண்ணீர் தேங்கத் துவங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று நகரில் மழை பெய்தபோது எடுக்கப்பட்ட படக்காட்சிகள்:-
3. கொழும்பு கப்பல் posted byvsm ali (Kangxi , jiangmen, china)[09 December 2010] IP: 183.*.*.* China | Comment Reference Number: 1508
கஸ்ஸாலி காக்கா, இந்த பிரச்சினைய கொஞ்சம் சீக்கிரமா கவனிங்கோ. இல்லேன்னா, இங்கிருந்தே கொழும்புக்கு கப்பல் விட போராட்டம் பண்ணிடுவாங்க. அந்த அளவுக்கு தண்ணீர் தேங்கி இருக்கு.
4. Sewerage posted byKASALI MARICAR (KAYALPATTINAM)[09 December 2010] IP: 117.*.*.* India | Comment Reference Number: 1509
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 95 சதவிகித பகுதிகளில் மழைநீர் வடிகால் (Sewerage) கிடையாது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்திலேயே காயல்பட்டினம் நகராட்சி தவிர்த்து அனைத்து ஊர்களிலும் 100 சதவிகிதம் மழைநீர் வடிகால் உண்டு.
மழைநீர் வடிகால் (Sewerage) வசதி இல்லாததால் தான் மேலே காணும் தெருக்கள் மற்றுமின்றி காயல்பட்டினத்திலுள்ள 85 சதவிகித தெருக்களிளும் மழைநீர் வடிய வாய்பில்லை.
இப்போதுள்ளபடியே தொடருமானால் வருங்காலங்களில் அதிகமாக மழைபொழியும் காலங்களில் அம்மழைநீரினால் நாம்படபோகும் துன்பம் ஏராளம். ஆக இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பாதாள சாக்கடை திட்டம் (Sewerage) மட்டுமே.
இத்திட்டம் செயல்படுத்த நகராட்சியால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் காயல்பட்டினத்திலுள்ள அனைத்து ஜமாத்துகளிளும் அந்நந்த நகர்மன்ற உறுப்பினர்கள் மூலம் தனித்தனியே கருத்து கேட்கப்பட்டதில் பெரும்பான்மையான ஜமாத்தார்கள் பாதாள சாக்கடை திட்டம் நமதூருக்கு உகந்ததல்ல என மறுத்ததால் இத்திட்டம் கைவிடப்பபட்டது.
எதிர்காலத்தில் பாதாள சாக்கடை திட்டம் நமதூருக்கு வேண்டும் என ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்பட்டால் நகராட்சியால் இத்திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளோம் என தெரிவித்து கொள்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross