தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்டு உள்ள பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆட்சியர் சி.என்.மகேசுவரன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலையில் ஏற்பட்டு உள்ள உடைப்புகளில் ஜல்லி, மணல் நிரப்பி சரி செய்யும் பணியில் அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணியில் 250 சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். 6 பொக்லைன் இயந்திரங்கள், ஒரு புல்டோசர் இயந்திரம் மூலம் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
சாலை செப்பனிடும் பணிக்கு மணல், ஜல்லி எடுத்து செல்பவர்களை யாரும் தடுக்கக் கூடாது என்றும், ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாநகராட்சியில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொசுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் குப்பைகள், கழிவுப் பொருட்களை உடனுக்குடன் அகற்றவும், மருந்து தெளிப்பான் மூலம் மருந்துகள் தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திரேஸ்புரம் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. வெள்ள சேதங்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு உள்ள பணியாளர்களுக்கு, பொதுமக்கள் வேண்டிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
தகவல்:
www.tutyonline.com
|