சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி வளாகத்தில் தமிழ் நாடு வக்ப் வாரியம் மற்றும் SEED அறக்கட்டளை இணைந்து IAS பயிற்சி மையம் அமைத்துள்ளனர்.
இது குறித்து வெள்ளியன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ் நாடு வக்ப் வாரிய தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் - சமீபத்தில் வக்ப் வாரிய ஏற்பாட்டில் அறிவிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிக்கு தனவந்தர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறினார்.
SEED அறகட்டளையின் அறங்காவளர் எஸ்.எம்.ஹிதயதுல்லாஹ் பேசும் போது - இந்தியாவில் முஸ்லிம்கள் ஜனத்தொகையில் 15 சதவீதம் இருந்தாலும், IAS மற்றும் பிற குரூப் 1, 2 பொறுப்புகளில் வெறும் 3 சதீவீத அளவே உள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி கலந்துகொண்டார். அவர் பேசுகையில் - இலவச பயிற்சி பெற்று 85 பேர் தன் அறக்கட்டளை மூலம் IAS அதிகாரிகளாக ஆகியுள்ளதாக தெரிவித்தார்.
புதுக்கல்லூரியை நடத்தும் Muslim Educational Association of South India (MEASI) அமைப்பின் செயலாளர் ஹெச்.எம். சம்சுதீன் பேசும்போது வங்கிகளில் சேருவதற்கான தேர்வு உட்பட பல தேர்வுகளுக்கான பயிற்சி முகாம்கள் தன் அமைப்பினால் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கல்லூரியின் முதல்வர் கே.அல்தாப் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய ஹஜ் குழு துணைத்தலைவர் அபூபக்கர், சதக் அறக்கட்டளை சார்ந்த ஹமீது அப்துல் காதர், Professional Couriers அஹ்மத் மீரான் மற்றும் SEED அறக்கட்டளையின் எஸ்.எம். செய்யத் அப்துல் காதர் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
தகவல்:
தி ஹிந்து |