தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், 11.12.2010 அன்று சென்னை தாம்பரம் ரெயில்வே மைதானத்தில் நடத்தப்பட்ட மாநில மாநாட்டில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, 10.12.2010 அன்று மாலையில், காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) வளாகத்திலிருந்து, நான்கு பேருந்துகளில் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் சென்னைக்குப் புறப்பட்டனர். முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் மன்னர் பாதுல் அஷ்ஹப், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர், நகர துணைச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.எச்.அப்துல் வாஹித் உள்ளிட்டோர் மாநாட்டிற்குச் செல்லும் காயலர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
நகர முஸ்லிம் லீகின் மறைந்த மூத்த உறுப்பினர் பாளையம் முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மகன் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் கொடியசைத்து பயணத்தைத் துவக்கி வைத்தார்.
11.12.2010 அன்று காலை 10.00 மணிக்கு மாநில மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
மதியம் 03.00 மணிக்கு பிறைக்கொடி பேரணி நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் இப்பேரணியில் மாவட்டவாரியாக அணியணியாகக் கலந்துகொண்டனர்.
மாலை 06.00 மணிக்கு சென்னை தாம்பரம் ரெயில்வே மைதானத்தில் மாநில மாநாடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.
முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், தொடர்வண்டித்துறை நடுவண் இணையமைச்சருமான இ.அஹ்மத் முன்னிலை வகித்தார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மான் எம்.பி. துவக்கவுரையாற்றினார். முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். காயல் மகபூப் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தார்.
பின்னர், மாநாட்டுத் தீர்மானங்களை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாஸித், நெல்லை மஜீத், எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், கமுதி பஷீர், திருப்பூர் சத்தார், வெ.ஜீவகிரிதரன், மில்லத் எஸ்.பி.இஸ்மாஈல், எம்.ஜெய்னுல் ஆபிதீன், தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான், குத்தாலம் லியாக்கத் அலீ, தாம்பரம் அப்துர்ரஷீத், கே.எம்.நிஜாமுத்தீன், காயல் மகபூப் ஆகியோர் முன்மொழிந்தனர்.
அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு, “நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்” விருது வழங்கப்படுவதையொட்டி, தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் ப்ரெஸிடென்ட் அபூபக்கர், தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான், கேரள மாநில முஸ்லிம் லீக் செயலர் குஞ்ஞாலிக்குட்டி, கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஹைதர் அலீ ஷிஹாப் தங்ஙள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், IUML Vision 2020 என்ற தலைப்பில், முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், தொடர்வண்டித் துறை நடுவண் இணையமைச்சருமான இ.அஹ்மத் ஆக்கத்தில் வெளியான நூலை அவர் வெளியிட, தமிழக முதல்வர் மு.கருணாநிதி அதனைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர். இ.அஹ்மத், தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வருக்கு, “நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்” விருது வழங்கப்பட்டது. பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அந்த விருதை வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட முதல்வர் ஏற்புரையாற்றினார்.
முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொருளாளர் வடக்குகோட்டையார் நன்றி கூற, துஆவுடன் மாநாட்டு நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன.
தகவல்:
S.A.இப்றாஹீம் மக்கீ,
மாநில பொதுக்குழு உறுப்பினர்,
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை,
காயல்பட்டினம். |