ஒன்றிணைவோம்!வென்றிடுவோம்!! posted bykavimagan (dubai)[15 December 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1627
பல்வேறு சமூகப்பணிகளில் தன்னை முன்னிலை பெறச்செய்திருக்கும் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மாமன்றத்திற்கு நல்வாழ்த்துக்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த மன்றம் ஏற்பாடு செய்திருந்த, காயல்நல வெளிநாட்டு மன்றங்களுக்கான அமர்வு ஒன்றில் பங்கேற்று,உரையாற்றும் வாய்ப்பினை, சமூக ஆர்வலர் ,சகோதரர் சட்னி செய்து மீரான் அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்றேன். அன்று அந்த மன்றத்தில் கத்தர் காயல் நல மன்றம் சார்பில் நான் வலியுறுத்திய கருத்தினை மீண்டும் அதே மாமன்றத்தின் செய்தித் தலைப்பின் கருத்து பாகத்தில், சாளை சலீம் காக்கா அவர்களும், நண்பர் கரீமும்
பதிவு செய்திருப்பது, புற்று நோயை ஒழித்திட, காயலர்கள் அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டிய
அவசியத்தை உணர்த்தி இருக்கிறது.
அவர்கள் கூறியது போல இது செயலாற்றும் தருணம். அனைத்துலக காயல்நல மன்றங்களும் தத்தம் ஆதரவினை, சென்னையில் இருந்து செயலாற்றிக் கொண்டிருக்கும், சகோதரர்
சாளை நவாஸ் மற்றும் செயல் வீரர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எல்லாம் வல்ல இறைவன் நம் நல்ல முயற்சிகளுக்கு வெற்றியைத் தருவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross