Re:குடியரசு தினம் அன்று நகர்... posted bySalai. Mohamed Mohideen (USA)[27 January 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 16282
இது ஒரு சப்பை மேட்டரா அல்லது சீறி சீரியசான மேட்டரா னு தெரியலே. நகர்மன்ற உள் பாலிடிக்ஸ்
மறைமுகமாக சொல்ல படுகிறது என்றால் கண்டுக்காம இருக்க முடியாது. ஏனென்றால் உற் கோஷ்டி பூசல்/அரசியல் , ஈகோ
மற்றும் பணபலம் கொண்டு நகர்மன்றத்தை ஆட்டி படைக்க நினைக்கும் ஆதிக்க சக்தி(கள்) எல்லாம் உள்ளே புகுந்து விட்டால் நகர்மன்றம் விளங்காமல் போய்விடும்.
'ஆணையர்' தலைவியிடமே கேட்டு இருக்கலாம்.போனமுறை 'நகர்மன்ற தலைவர்' தான் கொடி ஏற்றினார் என்பதனை பழைய போட்டோவில் அருகில் நிற்க்கும் துணை தலைவர் மறந்து விட்டாரோ என்னவோ. தலைவிக்கு வேறு இடத்தில் கொடி ஏற்ற வேண்டியது இருந்திருந்தால், இந்நிகழ்ச்சிக்கு அவர் கலந்திருக்க வாய்ப்பு இல்லை .
ஒரு வேளை, எவருக்கும் தீங்கிழைக்காத... இது போன்று சிறு கவனக்குறைவு /அறியாமையையில் நடப்பவைகளை, செய்தியாக ஊடகங்களில் வராமல் தவிர்ப்பது நல்லது. அதே நேரத்தில் சம்பந்த பட்டவர்களிடம் இக்கவனக்குறைவு /அறியாமையை ஏற்க்கனவே இந்நிகழ்வில் நீங்கள் தெரியபடுத்தியது போல் இருந்து விட்டால், அவர்களும் அடுத்த முறை கவனமாக இருப்பார்கள். இது போன்ற
செய்திகள் தேவை இல்லாமல் குழப்பத்தையும் மேலும் ஊடகம் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross