Who is best? posted byMohamed (Dammam)[16 December 2010] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1636
ஒரு சகோதரர் சொன்னதுபோல் நம் சமுதாயம் யாரை வைத்து நிறைய சலுகைகள் பெற்று இருக்கிறதோ அவர்கள் செய்யும் சில சில தவறுகளை மனம் பொருந்தித்தான் ஆக வேண்டும்.
காரணம் அவர்களுக்கு மாற்று மதத்தவர்களின் ஓட்டுகளும் வேண்டும் என்பதுதான் நிதர்சன உண்மை.
நாம் முஸ்லிம் நிறைந்த நாடுகளில் வாழவில்லை. அமெரிக்கவின் சூழ்சியால் அண்டாடம்
பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் நடக்கும் குண்டு வெடிப்புகள் நம்
எத்தனை சகோதரர்கள் தினமும் கொல்லபடுகிறார்கள். ஒரு சில சம்பவங்கள் இந்தியாவில்
நடந்தாலும், நாம் இங்கு சுமுகமாகவே இருந்துவருகிறோம். இதற்கு நமக்கு கொடுங்கோல்
ஆட்சியாளர் இல்லாமல் இருபதற்கு அல்லாஹ்வின் கிருபை தான் காரணம்.
ஒன்று மட்டும் நிச்சயமா சொல்லுவேன். கலைஞர் என்றுமே முஸ்லிம் மார்கத்தை இழிவுபடுத்தி பேசியது கிடையாது. ஹிந்து மக்கள் நிறைய பேரு வாக்களித்தும் ஹிந்துசமுதாயத்தை பல முறை கிண்டல் செய்து பேசி இருக்கிறார். அந்த கோணத்தில்
பார்த்தால் மற்ற அரசியல் வாதியை விட நல்லவர் தான்.
இப்ப உள்ள சூழ்நிலை, முஸ்லிம் லீக் இருக்கும் இடம் தமுமுக இருக்காது. தமுமுக சப்போர்ட் பண்ணும் கட்சிக்கு தொவ்ஹிட் ஜமாஅத் ஆதரவு தராது. ஆக நம் சமுதாயவாக்குகள் மொத்தமா எந்த ஒரு கட்சிக்கும் கிடைக்காது. பிரிந்து தான் கிடைக்கும்.
எனவே, நமக்கு ஆட்சியில் இருந்தபோதும் இல்லாதபோதும் நம் சமுதாயதிற்கு சார்பாய்மற்றவர்களை விட கலைஞர் இருந்திருக்கிறார். இதை யாரும் மறுக்கவோ மறக்கவோமுடியாது. சமுதாயத்துக்கு வாரியம் அமைத்தது, இட ஒதுக்கிடு தந்தது,உதாரணத்துக்கு சொல்லலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross