செய்தி: தமுமுக - மமக மாநில தலைவராக மவ்லவீ ஜே.எஸ்.ரிஃபாஈ ரஷாதீ போட்டியின்றி தேர்வு! இதர நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:தமுமுக - மமக மாநில தலைவரா... posted bysaburudeen (dubai)[30 January 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16377
1995ல் சமுதாய உரிமைகளை மீட்டெடுக்க உருவெடுத்த தமுமுக என்ற பேரியக்கம் பல சோதனைகளுக்கு மத்தியில் இறைவனின் மாபெரும் கிருபையால் ஓயாத கடல் அலைகள் போல அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாமல் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாய் வறியவர்க்கு உதவி, மாணவ செல்வங்களுக்கு உதவி, இரத்தம் தேவைப்படுவர்களுக்கு இரத்த உதவி, மற்றும் அவசர உதவி என விழித்துக்கொண்டிருக்கும் நேரமெல்லாம் உழைத்துக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவர் பேரா.டாக்டர்.M.H.ஜவாஹிருல்லாஹ்வும், அதிகாரவர்க்கத்தை அதிரவைக்கும் S.ஹைதர் அலி அவர்களும் சீரிய வழிநடத்தலால் இயக்கத்தை சிலர் கூறுப்போட முயற்சித்தபோதும் கடுமையான சோதனையை இயக்கம் சந்திதப்போதும் மனம் தளராமல், பயப்படாமல் இயக்கத்தை வழிநடத்திக்கொண்டு சென்ற உன்னத தலைவர்கள்.
தமுமுக வின் சட்டவிதிகளின் படி ஒருவர் குறைந்தபட்சம் மூன்று முறை பதவி வகிக்கலாம். அதற்கு மேல் பதவி வகிக்க முடியாது என்ற விதிகளின் படி பேரா.டாக்டர்.M.H.ஜவாஹிருல்லாஹ், S.ஹைதர் அலி ஆகிய இருவருமே பதவிகளில் இருந்து விலகி அடுத்த கட்ட தலைவர்களுக்கு வழி விட்டு ஒரு சிறந்த முன்மாதிரியை இந்த சமுதாயத்திற்கு ஏற்படுத்தி தந்துள்ளனர்.
புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகிகள் இந்த சமுதாயத்திற்காக மென்மேலும் சிறப்பாக செயல்பட துஆ செய்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross