Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ... posted byHAMEED SIRAJUDEEN (Pondicherry)[31 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 16396
சகோதரர்களே! அஸ்ஸலாமு ஆலைக்கும் (வரஹ்)
ALS Maama அவர்களுக்கு,
நான் எழுதிய கருத்து எண்: 4ல் மட்டும் குற்றம் கண்டு, மற்றவற்றை விட்டு விட்ட தங்களது பெருந்தன்மையை மதிக்கிறேன். அதே நேரம் நீங்கள் கூறியபடி பேனா முனை கூரியதாதலால், பட்டவர்த்தமாக எழுதினால் யாரையாவது கிழித்துவிடும் என்று எண்ணியே முழு விளக்கத்தையையும் விரிகவாக எழுதவில்லை. இதோ தங்களது கருத்துக்களுக்கு எனது பணிவான பதில்........
(((((((கூளக் கடை பஜார் வழியாக பஸ் போவதால் இந்த பயம் ஏற்ப்படும் என்று கூறிய உங்கள் எண்ணங்கள் சரிதானா? கூளக் கடை பஜார், உங்கள் தெரு போல ஊருக்குள் நல்ல பாதுகாப்பான இடம்தான், உங்களை போல் சிலர் வேறு பாதை வழியாக பேருந்து போக்குவரத்தை எங்கோ திருப்பி விடுவதால் பெரும்பாலும் முஸ்லீம்கள் அல்லாத மக்கள் வாழும் பகுதியாகவும் அதேசமயம் அங்கு நமது வேற்றுமத சகோதரர்கள் வாழ்ந்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளிகள் , மாலை வேலை செய்துவிட்டு இரவில் சீக்கிரமாக தூங்கப்போகும் வழக்கம் உடையவர்கள்.
நம்பகுதி தெருக்களில் இரவு 11 மணி ஆனாலும் ஆள் நடமாட்டம் இருக்கும். புதிய போக்குவரத்து அந்த பாதையில் அமைந்தால் அது உங்களின் நாலாவது கருத்துக்கு ஆபத்தாக அமையாதா ? )))))
கூலக்கடை பஜாரும் பஸ் போக்குவரத்துள்ள ரோடாக மாறினால், டிராபிக் (லோடு இறக்கும் லாரிகளால்) பிரச்சனைகள் வரும், அதனால் டிராபிக் போலீஸ் வரும் – பிறகு போலீஸ் ஸ்டேஷன் வரும் – இப்போது எனது அந்த கருத்தை (கருத்து எண்: 4 – Comment Reference no: 15479) படித்துப் பார்க்கும்படி தங்களை அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். (இதற்கு மேல் விளக்கமாக எழுத பொது மேடை இடங்கொடுக்காது – மன்னிக்கவும்)
பல கருத்துக்கள் பாய்ண்டுகளாக பிரித்து எழுதியிருந்தாலும் நான் கூற வந்ததின் மொத்த அர்த்தம் ஒன்று தான்.
நகரங்களில் உள்ளவர்கள் கிராமத்தை நோக்கி திரும்ப வரும் காலம் இது. ஆனால் நாமோ நமது அழகான ஊரை நகரமாக்கி (அதன் மூலம் நரகமாக்கி) பார்க்க ஆசைப்படுகிறோம். ஊருக்குள் இருவழி சாலை அமைய பெருவதால் ஏற்படும் நன்மைகளை மட்டுமே பார்க்கின்றீர்கள். ஆனால், அதனால் ஏற்படும் நேரடி/மறைமுக பாதிப்புகள் இப்போது தெரியாது.
“செருப்பு என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று தான். ஆனால் அதனை வீட்டிற்கு வெளியே தான் விட்டு வரவேண்டும். வீட்டிற்கு உள்ளே வந்த பிறகு, வேறு செருப்போ அல்லது வெறும் காலிலோ தான் நடமாடவேண்டும்” - அது போல், மெயின் ரோடு, பஸ் ஸ்டாண்டு, ரெயில்வே ஸ்டேஷன் போன்றவை ஊருக்கு வெளியே இருப்பதும் ஊருக்கு உள்ளே சிறிய ரக போக்குவரத்தும் தான் நன்மை என்பது எனது கருத்து.
* முதலில் செலவீனம் (ஆட்டோ சார்ஜ்) விஷயத்திற்கு வருவோம்.
ஒவ்வொருத்தரும் தனது வீட்டிற்கு அருகிலேயே பஸ் ஸ்டாண்டு, ரெயில்வே ஸ்டேஷன் போன்றவை இருக்க வேண்டும் என நினைக்க முடியாது என்பதால், எந்த இடத்தில் பஸ் ஸ்டாண்டு, ரெயில்வே ஸ்டேஷன் இருந்தாலும் பாதி மக்கள் ஆட்டோக்கு செலவு செய்து தான் ஆகவேண்டும்.
இப்போது ரெயில்வே ஸ்டேஷன் ஆறுமுகநேரி அருகில் இருப்பதால் ஆட்டோ ஏறி போகிறோம். சரி. பஸ் ஸ்டாண்டு தண்ணீர் தொட்டியின் கீழே தானே இருக்கிறது. காயல்வாசிகள் அனைவரும் நடந்தா வருகிறார்கள். போஸ்டு ஆபீஸில் எறி பஸ் ஸ்டாண்டில் இறங்கும் பெண்களையும் நமது ஊரில் நான் பார்த்திருக்கிறேன். அப்போ, ஆட்டோக்கு செலவு செய்வது தூரம் என்பதால் அல்ல. வசதியை பொறுத்து தான் இல்லையா?
* பாதுகாப்பு விஷயத்திற்கு வருவோம் பெரிய தெருவாசிகள் கூறிய (KMT to VISHALATCHI AMMAN ST) புதிய வழிதடத்தில் பஸ் போனால் பாதுகாப்பு இருக்காது என்று சிலர் கூறுகிறார்கள். நான் கேட்பது என்னவென்றால்,
ஆறுமுகநேரி – பஸ்ஸ்டாண்டு – விசாலாட்சி அம்மன் தெரு – கே.எம்.டி – திருச்செந்தூர்
(அல்லது)
திருச்செந்தூர் – கே.எம்.டி – விசாலாட்சி அம்மன் தெரு - பஸ்ஸ்டாண்டு - ஆறுமுகநேரி
இந்த மார்க்கமாக தான் பஸ் போகப்போகிறது. இப்போது இருப்பது போல் பஸ்ஸ்டாண்டு மற்றும் கே.எம்.டி இரண்டும் பஸ் நிற்கும் இடம். இதில் பாதுகாப்பு எங்கே வந்தது? ஒரு வேளை ஓடும் பேருந்தில் பாதுகாப்பு இருக்காது என்று நினைகின்றீர்களா? அப்படி என்றால் திருச்செந்தூரிலிருந்து வரும் போதோ......
ஆறுமுகநேரியிலிருந்து வரும் போதோ...... முழுவதும் ஆள் நடமாட்டம் உள்ள இடங்கள் வழியாகத்தான் பஸ் வருகிறதா?
இரவில் நேரம் தவறி வருபவர்களுக்கான பாதுகாப்பைப் பற்றி யோசிக்கும் எனது அன்பு சகோதரர்களே! தாமதமாக எத்தனை ஆயிரம் பேர் வருகிறார்கள் என்பதையும் ஒரு முறை யோசித்துப் பாருங்கள். அப்படி வருபவர்களுக்கு நமது போஸ்ட் ஆபீஸ் ஸ்டாப்பில் மட்டும் பலமான பாதுகாப்பு இருக்கிறதா?
இப்போது கலெக்டரும் நாங்கள் கூறிய “புதிய வழித்தடத்தில் பஸ் விடுவதைப் பற்றி ஆராய்ந்து பின்னர் முடிவு எடுக்கப்பட வேண்டும்” – என்று தான் அறிவித்துள்ளார். பெரிய நெசவு தெரு வழியாக பஸ் போக்குவரத்து வருங்காலத்தில் இடஞ்சலாக இருக்கும் என்பதை தானே நாங்களும் கூறினோம். பின்னர் எடுக்கப் போகும் முடிவை இப்போதே எடுத்தால் என்ன?
பெரிய தெருவாசிகள் கண்மூடித்தனமாக ஒரு-வழி போக்குவரத்தை எதிர்க்கவில்லை என்பதை சகோதரர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
பஸ் போக்குவரத்தால் கே.டி.எம் தெருவாசிகள் படும் அவஸ்தைகளை கேட்டு/பார்த்து புரிந்துக் கொண்டதால் தான் எதிர்க்கின்றோம். அவர்களையும் காயல் மாநகரத்திற்காக நீங்கள் மென்மேலும் விட்டு கொடுத்துதான் ஆக வேண்டும் என்றும் நாங்கள் கூறவில்லை. நமது ஊர்வழியாக ஹை-வேஸ் ரோடு இருப்பதை விட ஊருக்கு வெளியே இருப்பது தான் சிறந்தது என்றுதான் கூறுகிறோம்.
நமது ஊரை விட பெரிய ஊர்களில் கூட பஸ் போக்குவரத்து வெளியே உள்ளது. அந்த ஊர் மக்கள் பயத்திலோ, செலவாகும் என்றோ கவலைபடுவதாக அறியப்படவில்லை. நமது ஊரிலாவது தனியே பெண்கள் இரவில் நடமாடுவதில்லை. ஆனால், அந்த ஊர்களில் அப்படி இல்லை.
அடைக்கலாபுரம் வழியாக பஸ் போவதற்கு இட நெருக்கடி மட்டுமே காரணமில்லை. நான் பாண்டிச்சேரியிலிருந்து பஸ் ஏறினால் காயல்பட்டிணத்திற்கு டிக்கெட் தருவதில்லை. “பஸ் அடைக்கலாபுரம் வழியாகத் தான் போகும். ஆகவே ஆறுமுகநேரிலோ அல்லது திருச்செந்தூரிலோ இறங்கிக் கொள்” - என்று பஸ்காரர்கள் சொல்கிறார்கள் (ரூட் ஷீட்படி காயல்பட்டிணம் தான் வழி என்பது வேறவிஷயம்). காலை 5-6 மணிக்கு என்னங்க டிராபிக் இருக்கப்போகுது?. இப்படி பல உதாரணத்தை என்னால் கொடுக்க முடியும்.
நமது ஊரை போன்ற CLOSED COMMUNITY ல், ஊருக்கு வெளியே கனரக போக்குவரத்தும், ஊருக்கு ஊள்ளே சிறிய ரக வாகனப் போக்குவரத்தும் இருப்பது தான் நன்மை என்பதை சகோதரர்களே தயவு செய்துப் புரிந்துக் கொள்ளுங்கள். இப்போது கலெக்டர் ஆணை பிறப்பித்த பின்னரும் கூட இது தான் எங்களது நிலைப்பாடு.
மேலும், இது விஷயமாக பேசிய அனைத்து சகோதரர்களும், பெரிய நெசவு தெருவாசிகள் எழுப்பிய ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டை மிகவும் பெர்சனலாக எடுத்துக்கொண்டு அர்ச்சனை செய்தார்கள். “திருடர்களை பிடித்து, தண்டனை கொடுக்க வேண்டும் என பொதுவாக கூறினால், திருடர்கள் மட்டுமே கோபப்பட வேண்டும். திருடர் அல்லாதவர்களும் ஏன் கோபப்பட்டார்கள்?
ஊருக்கு நல்லது என்று வரும்போது, வீண் பிடிவாதம் பிடிக்க கூடாது – என்பது பலரது கருத்து. நன்று. ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அந்த கருத்து தவறுதலாக இருந்துவிட்டால்?... அப்போதும் நான் ஊர் நன்மையைக் கருதி வாய் மூடி இருக்க வேண்டுமா?. ஊருக்குள் இருவழி/ஒருவழி – எந்த வழி இருந்தாலும் லாபத்தைவிட நஷ்டம் அதிகம் என்பதும் என் கருத்து. என்னுடைய வீட்டிற்கு/குடும்பத்திற்கு பாதிப்பு என்றால், நான் தான் குரல் கொடுக்க வேண்டும். வேறு யாரையாவது சத்தம் போடச் சொல்லமுடியுமா? ஆகவே தான் நாங்கள் எங்களது கருத்தை பதிவு செய்தோம்.
அப்பப்பா! எவ்வளவு அர்ச்சனைகள். இப்போது இங்கு எழுதியுள்ள அனைவரும் மிகவும் சாந்தமாக பேசியிருப்பதையும் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இப்போது எல்லோருமே பெரிய தெருவாசிகளை சமாதானப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். வெற்றி/தோல்வியை பற்றி நான் பேசவில்லை. மனித மனம் தனக்கு ஒன்று கிடைக்கும் வரை மட்டுமே அலைப்பாய்கிறது. கிடைத்து விட்டாலோ அமைதி அடைந்துவிடுகிறது. வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross