செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜனவரி மாதத்திற்கான கூட்டம்! நகர்நலத் திட்டங்களுக்கான தீர்மானம் நிறைவேற்றம்!! முன்னாள் உறுப்பினர் மறைவுக்கு இரங்கல்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நான் அப்படியே சாக் ஆகிட்டேன் ..... posted byமுத்துவாப்பா... (அல்-கோபர்)[01 February 2012] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16419
அனைவரின் கோரிக்கைளையும் பரிசீலித்து கூடிய விரைவில் நிறைவேற்ற ஆவணம் செய்யும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .
அத்துடன் சேர்த்து என்னுடைய இந்த கோரிக்கையையும் எங்களின் 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் காக்கா அவர்களும் ,நகர் மன்ற தலைவி அவர்களும் பரிசீலிக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
எங்கள் வீடு 13ஆவது வார்டுக்கு உட்பட்ட எல் எப் ரோட்டில் உள்ளது எங்கள் வீட்டில் கடந்த இரண்டு மாதங்களாக சரியாக மின்சார மீட்டர் இயங்கவில்லை ஆதலால் கடைசியாக எடுத்த அளவின் படி கடந்த இரண்டு மாதங்களாக கட்டணம் வசூல் செய்தனர். மீட்டரை மாற்றவும் இல்லை , அதை அவர்கள் சரி செய்யவும் இல்லை. இப்படி இருக்கையில் மீட்டர் சரியாக ஓடாததால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது நமதூர் மின்சார வாரியம் . இது குறித்து நமதூர் மின்சார வாரியத்திடம் பல முறையிட்டும் இந்த அபராத தொகையை நீங்கள் கட்டி தான் ஆக வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .
சரி இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த அபராத தொகையை கட்டிவிட்டு புதிய மீட்டரை நிறுவுங்கள் என்று நமதூர் AE ராஜன் அவர்களை கேட்டு கொண்டால் அதற்கு அவர்கள் கூறிய பதில் தான் என்னை சாக் அடிக்க வைத்துவிட்டது . தற்பொழுது நமதூர் மின்சார வாரியத்திடம் எந்த புதிய மீட்டரும் இல்லையாம் , இருந்த மீட்டரை எல்லாம் தானே புயல் பாதித்த இடங்களுக்கு அனுப்பி விட்டார்களாம் மேலும் அடுத்து புதிய மீட்டர் வர பல மாதங்கள் ஆகுமாம் அதுவரை நாங்கள் மாதம் மாதம் அபராத தொகை ஐநூறு ரூபாய் கட்டி கொண்டே இருக்க வேண்டுமாம் . மேலும் இதற்கு மேலும் உங்களுக்கு விளக்கம் தேவை என்றால் முதலமைச்சர் அம்மாவிடம் கடிதம் போட்டு கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்கள். இது போல் பலர் நமதூரில் பாதிக்கப்படுகின்றார்கள் . இந்த பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் , நமதூர் நகர் மன்றம் தலையிட்டு இதற்கு நல்லதொரு முடிவை தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross