முழுநேர ஆணையரை நியமிப்பது நல்லது posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் )[02 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16436
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நமது நகர் மன்றத்திற்கு ஆணையர் பொறுப்பை ஏற்க வரும் வீ.எஸ். சுப்புலட்சுமி அவர்களை வருக, வருக என வரவேற்கிறோம்.
பல ஊர்களில் பணியாற்றிய அனுபவமும், காயல்பட்டணத்தில் சில மாதங்கள் பணியாற்றிய அனுபவமும் இருப்பதுடன் தற்போது கோவில்பட்டி ஆணையர் பொறுப்பில் இருப்பதாலும் இங்கு வந்து நல்ல பல சேவைகளை செய்வார் என்று எதிர் பார்க்கலாம்.
இருந்தபோதிலும் அவர் முழுநேர ஆணையராக இல்லாமல் திருநெல்வேலியில் உள்ள RDMA அலுவலக பணியில் இருந்துக்கொண்டே, காயல்பட்டணம் ஆணையர் பொறுப்பினையும் வகிப்பார் என்று சொன்னால் அவரிடம் நல்ல ஒரு நிர்வாகத்தை எதிர்பார்க்க முடியாது.
இது அவருடைய பலகீனத்தையோ , நிர்வாக திறமையின்மையையோ குறிப்பிடுவதல்ல - மாறாக அவரை எந்த ஒரு பதவியிலும் முழுமையாக செயல்படவிடாமல் மேலிடம் செய்யும் தவறே.
முழுநேர ஆணையரை நியமித்தால்தான் நகராட்சி முறையாக செயல்படும் - அதல்லாது இப்படி இரண்டு இடத்தின் பொறுப்புக்களையும் ஒருவர் பார்க்க வேண்டும் என்றால் அது நடக்காத காரியம்.
காரணம் அவர் பணி செய்ய இருக்கும் இரண்டு இடங்களுமே அருகில் இல்லை வெகு தூரத்தில் உள்ளது.
மேலும் ஆணையராக பொறுப்பில் இருப்பவர் ஊரின் எல்லைக்குள்ளே குடியிருக்க இருக்க வேண்டும் - அப்படி அவர் முழுநேரமும் ஊரில் இல்லை என்றால் பயனேதுமில்லை.
அவரிடம் எந்த நிறையும், குறையும் கண்டு பிடிக்க முடியாது.
ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் அவரை முழுநேர பணி செய்ய பணிக்க வேண்டும் அல்லது முழுநேர பணி புரியும் வேறொருவரை ஆணையராக நியமிப்பது நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross