செய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்டு விழா! தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்!! கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
படிக்கும் பள்ளி ஆண்டுவிழாவில் சினிமா பாட்டு வேண்டாம்..! இதனால் நமதூரின் கலாச்சார சீரழிவு மற்றும் ஒழுக்க சீர்கேடுகள்... posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[06 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16559
எல்.கே. பள்ளி ஆண்டுவிழா பட்டிமன்றம் என்ற பெயரில் அதில் கலாச்சார ஒழுக்க சீரழிவை ஊக்கவிக்கும் வகையில் சினிமா பாடல்கள்...! அக்கால பாடலா ? இக்கால பாடலா ? என்ற தலைப்பில் ஒரு அசிங்கத்தை நடத்தி பட்டிமன்றத்தை ஆர்வமுடன் கேட்க வந்த பொதுமக்களின் பல பேர் (ஒழுக்கத்தையும் நல்ல கலாச்சாரத்தையும் விரும்பும் மக்கள்) அதிகமானோர் தனது இருக்கையில் இருந்து வெளியே போகும் படி வைத்தன..! பள்ளிகூடங்களில் சினிமா பாடல்கள் ஆடல்கள் கூடாது.. என்று தமிழக அரசு விதிமுறை சொல்லி இருக்கிறது..! அதையும் மீறி செயல் பட்ட ஆசிரியர்களை வன்மையாக கண்டிக்கிறேன்..
நல்ல ஒழுக்கத்தை போதிக்கும் ஆசிரிய பெருமக்கள் பள்ளி மேடையில் பழைய.. புதிய...சினிமா பாடல்களை பாடி வந்திருந்தோரின் முகம் சுளிக்கவும் வெறுப்படையவும் வைத்தனர். நிர்வாகமும் இதை கண்டித்ததாக தெரியவில்லை... இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் நமதூரின் கலாச்சாரத்தை.. ஒழுக்கத்தை சீர்குலைக்க இந்த பள்ளியில் ஒரு ஓரிரு குள்ளநரிகள் இருக்குமோ..? என்ற சந்தேகம் வருகிறது...
இன்று வரை நல்ல பெயர் புகழோடு விளங்கிய நமது எல்.கே. பள்ளி ஆண்டுவிழா இன்று சினிமா மோகத்தில் மாணவர்களை எல் கே பள்ளி ஆசிரிய பெருமக்கள் ஒழுக்க சீர்கேட்டுக்கு ஊக்குவிப்பதை நினைத்து வேதனை அடைந்தேன்.. மாணவர்கள் சீர்கெட்டுபோவதை நினைத்து பல பேர் இதுபோல் மனவேதனை அடைந்தார்கள்...
எத்தனையோ தலைப்புகளில் பட்டிமன்றங்கள் நடத்தலாம் உதாரனத்திற்க்கு அக்கால உணவு வகைகள் - இக்கால உணவு வகைகள் சிறந்ததா...? மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவது எது... பணமா ? திறமையா ? இப்படி எத்தனையோ தலைப்புகளில் பேசலாம் அதனால் அந்த மாணவனுக்கு நல்ல யோசனை கிடைக்க பெறுகிறான்... பயன் பெறுகிறான்..
இனிவரும் பள்ளி ஆண்டுவிழாவில் இனியாவது நிர்வாகமும் - ஆசிரிய பெருமக்களும் இதுபோல் சினிமா சீரழிவில் இருந்து மாணவ கண்மணிகளை காப்பாற்றுங்கள்... இது எனது தாழ்மையான வேண்டுகோள்..
என்றும் நட்புடன்
எல்.கே. பள்ளி முன்னாள் மாணவன்.
தமிழன் - முத்து இஸ்மாயில்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross