செய்தி: உங்களுக்குக் கிடைத்துள்ள இத்தலைவியை நகர்நலனுக்காக நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்! ‘பசுமைக் காயல்‘ திட்ட துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உங்களுக்குக் கிடைத்துள்ள ... posted byVilack SMA (Hong Shen , Siacun)[08 February 2012] IP: 218.*.*.* China | Comment Reference Number: 16665
தலைவியின் " கனவுகள் " அனைத்தும் வெற்றிபெற வாழ்த்துக்கள் . " பிளாஸ்டிக் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு " கிட்டத்தட்ட முழுவெற்றி பெற்றதாகவே தோன்றுகிறது . " பசுமை புரட்சி " வெற்றிபெற சமூகம் ஒத்துழைக்க வேண்டும் .
சுகாதாரம் :
-----------------
சென்ற நகரமன்ற ஆட்சியில் அறிமுகப்படுத்திய " குப்பை அல்லும் லாரி " திட்டம் , நல்ல திட்டம் , ஆனால் சமூகத்தின் ஒத்துழைப்பு அறவே இல்லை . லாரி வரும்போது , குப்பையை அவர்களிடம் நேரிடையாக எடுத்துக்கொடுக்க வேண்டும் . ஆனால் பெரும்பாலானோர் அப்படி செய்வதே இல்லை . உள் பகுதி வீட்டில் இருப்பவர்கள் , இரவோடு இரவாக , எவருக்கும் தெரியாமல் , , சிறிய , பெரிய பொட்டலங்களாக , அதை முறையாக கட்டாமல் , தெருவில் அடுத்தவர் வீட்டுமுன் வைத்து விட்டு செல்கின்றனர் . இரவில் , நாய் , பூனைகள் அதை கிளறிவிட்டு தெரு பூராவும் குப்பையாகி , லாரியில் வருபவர்கள் இதை கண்டுகொள்ளாமல் செல்கின்றனர் . இதை நான் ஊரில் இருந்த சமயம் நேரில் பார்த்தது .
தலைவிக்கு வேண்டுகோள் :
--------------------------------------------
இந்த " லாரி " திட்டம் மூலம் உங்களின் " சுகாதாரமான நகரம் " என்ற கனவு நிச்சயம் நிறைவேறாது . தயவுசெய்து இதற்கு மாற்று திட்டம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் . அல்லது தெருவில் குப்பை கொட்டுபவர்களையும் , இரவோடு இரவாக அடுத்தவர் வீட்டுமுன் குப்பையை வைத்து செல்லும் கயவர்களையும் கண்டறிந்து பாரபட்சமின்றி தண்டியுங்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross