Re:துளிர் சிறப்புக் குழந்தைக... posted bySalai.Mohamed Mohideen (USA)[09 February 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 16695
விளையாட்டு பொருட்களை இத்தட்டில் பெற வேண்டிய மூன்று வயது சிறுமிக்கு முதல் ரக (Type 1 ) நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை படித்த போது மனதிற்க்கு கவலை. இச்சிறுமி பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. துளிரின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். நீரழிவு நோய் கண்டறிவதற்ககான முகாம்களை நடத்துங்கள்...விழிப்புணர்வுகளை ஏற்படுத்துங்கள். ஏனென்றால் நம்மில் நிறைய பேர் அந்நோயின் பாதிப்பு இருப்பது தெரியாமல்...அதிலும் பெரும்பாலானோர் நமக்கெல்லாம் அந்நோய் இப்போதெல்லாம் வர வாய்ப்பு இல்லை என்ற அதீத நம்பிக்கையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு எதோ ஒரு மருத்துவச் சோதனைகளின் போது காலம் கடந்து கண்டுபிடிக்கப் படுகிறது. இந்நோயை நமக்கு நாமே சுய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பெற்றோரின் அன்பும், பள்ளிக்கூடத்தின் அரவணைப்பும், சமூகத்தின் சரியான புரிதலும், அன்றாட இன்சுலின் ஊசி பாவனையும் இருந்தால்...முதல் ரக நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் சிறுவயது குழந்தைகளை மற்றவர்களைப்போல வெற்றிகரமான வாழவைக்க முடியும். அல்லாஹ் தௌபீக் செய்வானாக!!
செய்யும் எந்த உதவியையும் பெறுபவரின் படங்களை/முகங்களை வெளியிடாமல் இருப்பது மிகவும் நன்றாக இருக்கும். ஒருவேளை உதவி பெறுபவர் அனுமதி தந்து இருந்தாலும் கூட.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross