செய்தி: பேருந்து நிலையம் அருகில் - கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக பரப்புரை! நிதி தர மறுத்த வணிகர்களுடன் வாக்குவாதம்!! பரப்புரையாளர்களை காவல்துறையினர் திருப்பியனுப்பினர்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பேருந்து நிலையம் அருகில் ... posted byஅமீர் சுல்தான் (சவுதி அரேபியா)[10 February 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16705
காயல்பட்டினம் பற்றிய இந்த செய்தி பெரும்பாலும் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது. சம்பவம் உண்மையாயினும் அது நடைபெற்ற பின்னணியையும் அலச வேண்டியுள்ளது.
பத்திரிகைகளில் வரும் அனைத்து செய்திகளையும் உண்மையே என்று நம்பும் சகோதரர்களுக்கு.....
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்வதற்காக அரசும் ஊடகங்களும் தற்போது பாசிச வகையறாக்களும் களத்தில் குதித்துள்ளனர். அதற்காகவேண்டியே போராட்டக்களத்தில் முனைப்புடன் செயல்படும் திரு.உதயகுமார் அவர்களை நாகரீகமற்ற வார்த்தைகளால் வசைபாடியும், அவருக்கு அமெரிக்க பணம் வருகின்றது, அன்னிய நாடுகள் துணைபுரிகின்றது என ஏக வசனத்தில் எழுதித்தள்ளுகின்றது தினமலர் போன்ற தரம் தாழ்ந்த பத்திரிகைகள். அதற்கு நம்மின் சகோதரர்களும் நம்பி தங்களது கருத்தாக பதிப்பது வேதனையளிக்கின்றது.
சதாரண வேதியியல் பொருட்களும் கொஞ்சம் மின்சாரமும் தயாரிக்கும் அருகிலுள்ள தாரங்கதார கெமிக்கல் மூலம் ஏற்பட்ட, ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற கேன்சர் போன்ற கொடிய வியாதிகள் ஏராளம் ஏராளம். அணு உலை மூலம்.......நினைக்கவே குலைநடுங்குகிறது....
அவ்வப்போது நம் கடல் செங்கடல் ஆகின்றது...அணுஉலை கழிவுகளால் நம் கடல் சாக் கடல் ஆகிவிடும்...
சகோரதர்களே....
பேருந்து நிலையத்திலிருந்து அணுஉலையை எதிர்ப்பு பரப்புரையை செய்த மகஇக தோழர்களை விரட்டிவிட்டவர்கள் நிச்சயமாக காவி சிந்தனைகளால் மூலைசளவைச் செய்யப்பட்ட வியாபாரிகளாகத்தான் இருக்கவேண்டும். சமீபத்தில் நெல்லை கலக்டர் அலுவலக வளாகத்தில் பெண்களிடம் செருப்படி வாங்கிய இந்து முன்னணியினரை பற்றிய செய்திகள் வெளிவந்ததை அறிந்திருப்பீர்கள். இவர்கள் அடிவாங்கிய காரணம் அணுஉலை எதிர்ப்புக்குழுவுக்கு எதிராக செயல்பட்டதுதான்.
இங்கே அணுஉலை பற்றிய சிறு தொகுப்பு நம் சகோதரர்களுக்காக..
1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள செர்னோபில் நகரத்தில் இருந்த அணுஉலை விபத்துக்குப் பின்னர் அந்த சூத்திரம் கொண்ட எல்லா அணு உலைகளையும் மூட ரஷ்யா முடிவெடுத்த போது அதில் ஒன்றை இந்தியாவிற்கு விற்றது.இதற்கான ஒப்பந்தம் 1988ம் ஆண்டு இராஜீவ் - கோர்பசேவ் இடையே கையெழுத்தானது.கூடங்குளம் பிரச்னைக்கான மூலம் இங்கிருந்துதான் துவங்குகி;ன்றது.
பத்தாண்டுகளாக கிடப்பிலிருந்த இத்திட்டத்தை 2001 இல் மீண்டும் துவங்கினார்கள்.இந்த அணுஉலையின் அபாயங்கள் பற்றி நிபுணர்கள் நிறையபேர் அச்ச உணர்வை வெளியிட்டு இருக்கிறார்கள்.இதற்காக மொத்த தாமிரபரணி நீரில் பாதியும் பேச்சிப்பாறை அணையின் நீரும் தேவைப்படும்.மேலும் கூடங்குளமானது தென்னகத்தின் பூகம்ப பாதையில் உள்ளது.2006ம் ஆண்டு இருமுறை மெல்லிய நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன.இதனால் அணுஉலையின் பெரும்பாலான கட்டுமானங்கள் பாதிப்படைந்துள்ளன.இந்த அணுஉலையை நிறுவுவதற்காக கூடங்குளத்தை ஒட்டியுள்ள சுமார் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ள பகுதியில் வசிக்கும் 10 இலட்சம் மக்களையும் பாதிப்புகளை முன்னிறுத்தி வெளியேற்ற வேண்டும்.
அணுமின் நிலைய கழிவுகள் ரஷ்யாவிற்கு எடுத்துச்செல்லப்படும் என்ற ஒப்பந்தம்,இந்திய அரசின் பலகீனத்தால் இங்கேயே மறுசுழற்சி செய்யப்படும் என்று உருமாறிய போது நிபுணர்கள் அச்சம் கொண்டனர்.காரணம் 120 கடல் மைல் சுற்றளவு கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறிவிடும்.மீனவர்களின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படும்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கிராமவாழ் மக்கள் பலர் பல ஆண்டுகளாக கேன்சர் உள்ளிட்ட கொடிய வியாதிகள் உடல் அங்ககீனம் மூளை பாதிப்படைந்த குழந்தைகள் பிறத்தல் போன்ற இன்னோரென்ன பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் என்பதை அரசும் சுற்றுப்புற செயல்பாட்டாளர்களும் நன்றாகவே அறிவர்.இவை அப்படியே கூடங்குளத்திற்கும் பொருந்தும்.
ஆமெரிக்க ஜெர்மன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளெல்லாம் அணுமின் திட்டங்களை கைவிட்ட நிலையில் மக்களின் நலனின் கொஞ்சம் கூட அக்கறையில்லாத இந்திய அரசு இத்திட்டத்திற்கு அணுமதியளித்துள்ளது.இவற்றினுடேதான் கூடங்குளம் பிரச்னையை அணுகவேண்டும்.
17000 கோடிக்குமேல் செலவான திட்டச் செலவைப்பற்றி பலர் அங்காலாய்கின்றனர்.அரசும் இதனையே கூறுகின்றது.ஏறக்குறைய 2இலட்சம் கோடியை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கோட்டைவிட்டவர்கள் கூறுவதுதான் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது.மக்களுக்காக திட்டங்களா?திட்டங்களுக்காக மக்களா?அரசின் போக்கு புரியவில்லை
எரிபொருள் பற்றாக்குறை மின்சார பற்றாக்குறை இந்தியாவின் முக்கிய பிரச்னை என்பதை எவரும் மறுக்க முடியாது அதற்கான தீர்வுகளை நாடுவதும் அவசியமானதே.ஆகால் நம்முடைய மின்சார பற்றாக்குறையை தீர்பதற்கு அணுஉலைகள் மட்டுமே வழி என்பதை ஏற்கமுடியாது
இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுக்கவே அணுஉலைகள் ஆற்றல் உற்பத்திக்கு இலாபகரமானவை அல்ல என்ற முடிவுக்கு அறிவியலாளர்கள் வந்துவிட்டார்கள்.பாதுகாப்பு ஏற்பாடுகள் அணுகழிவுகளை பாதுகாப்பாக சேமிக்கும் முறைகள்ஆகியவற்றுக்கான செலவுகளை நீண்டகால அளவில் கணக்கிட்டால் அணுஉலைகள் மிக மிக அதிகமாக செலவு பிடிப்பவை என நீருபிக்கப்பட்டுள்ளது.
அணுஉலைகளுக்குத் தேவைப்படும் பிரமாண்டமான முதலீட்டையும் தொடரும் நிருவாகச் செலவையும் பிற ஆற்றல் உற்பத்தி முறைகளுக்கு செலவிட முடிந்தால் உலகின் எரிபொருள் தேவையை சிறப்பான முறையில் எதிர்கொள்ள முடியும்
இந்தியாவின் மின்சாரத்துறையில் மிகப்பெரிய சிக்கலே மின்கடத்தும் போது ஏற்படும் இழப்புதான்.இன்னொன்று மின் திருட்டு.ஆக நாம் பயன்படுத்தும் மின்சாரத்தை விட இழக்கும் மின்சாரம் அதிகம்.இவ்விரண்டையும் சமாளித்தாலே இந்தியாவின் மின்தட்டுபாடு பெருமளவு நீங்கிவிடும்.
அடுத்து இந்த அணுஉலைகளை எப்போதுமே வெளிநாடுகள்தான் அமைத்துத் தருகின்றன.இதற்கான பணம் முழுக்க அந்நாடுகளுக்குதான் சென்று சேர்கின்றன.அந்நாடுகள் தங்களது காலாவதியான தொழில்நுட்பத்தை நமக்களிக்கினறன.அதற்கு ஈடாக பெரும் பணம் பெற்றுக்கொள்கின்றன.பேரங்கள் இராணுவ ரகசியங்களாக எஞ்சுகின்றன.
இந்தியாவில் எந்த அணுஉலையும் அதன் முழுத்திறனுடன் செயல்பட்டதில்லை.அவை உருவாக்கிய மின்சாரத்துக்கு அவற்றுக்கான செலவினங்களை வட்டியுடன் கணக்கிட்டால் நீர் மின்சாரத்திற்கு ஆகும் செலவைவிட 50 மடங்கு அதிகம்
ஆகவே அணுஉலைகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு தேவையில்லை அவை இந்த நாட்டின் செல்வத்தை வளர்ந்த நாடுகள் கொள்ளையடிக்கும் வழிகள் மட்டுமே அவற்றின் ஆபத்து மட்டுமே நமக்கு எஞ்சுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross