நம்பிக்கை தான் வாழ்க்கை posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[13 February 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16754
தொடரும் மின்வெட்டுகள்! வளரும் எதிர்ப்பு! என்று ஆறு பாகங்களாக கட்டுரை பதித்த உங்களுக்கு நன்றிகள். புரியாத பல செய்திகள் புரிந்தன.
புரியாதவைகள் இரண்டு தான். இரண்டும் அம்மா கூறியது தான்.
* ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் மின் பற்றாக்குறையை சரி செய்து, மின் வெட்டே இல்லாத தமிழகமாக மாற்றுவோம் என்றார்கள்..
--- இன்னும் நம்புவோம்...அதான் மூன்று மாதம் ஆகவே இல்லையே. நம்பிக்கை தான் வாழ்க்கை. ஐந்து வருடத்திற்கு இதே நம்பிக்கையுடன் வாழ பழகனும்.
* திருட்டு, வழிப்பறி செய்து கொண்டு இருந்த கும்பல்கள், துண்டை கானோம் துணியை கானோம் என்று அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டார்கள்.
--- அண்டை மாநிலத்திற்கு சென்ற திருடர்கள் எல்லாம், இந்த 8 மணி, 9 மணி நேர மின்வெட்டை ஒரு சாதகமாக எடுத்துக்கொண்டு, திருட்டு, வழிப்பறி தொழில் செய்ய மிகவும் தோதுவான மாநிலம் தமிழகம் தான் என்று திரும்பவும் வராமல் இருக்கனும். நம்புவோம்...நம்பிக்கை தானே வாழ்க்கை.
**** ஒரு சின்ன சந்தோஷம்.. நேற்று அம்மி கொத்துபவர் பல வீடுகளுக்கு வந்து, அம்மி கொத்தி விட்டு சென்றாராம். பல காலமாக சீண்டாமல் இருந்த அம்மி, குலவிகள், அம்மாவிற்கு நன்றி சொல்லுகிறதாம். ****
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross