செய்தி: பெரிய நெசவுத் தெரு வழியே ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரு மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்! நூற்றுக்கணக்கானோர் கைது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பெரிய நெசவுத் தெரு வழியே ... posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்.)[13 February 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 16756
இப்படியே தங்கள் தெருவைக் காப்பாத்துவோம்ன்னு ஆளாளுக்கு மறியல் பண்ணினால் நமதூரில் வெறும் ஆட்டோவும்,சைக்கிளும் மட்டும் தான் ஓடும்.கே.டி.எம்.தெருவாசிகள்,மினி பஸ் போகும் நெய்னார் தெருவாசிகள் இப்படி அவங்களும் கிளம்பிட்டாங்கன்னா நிலமை என்னவாகும்?
மறியல் பண்ணும் போது வாகனங்களை ஆசாரிமார்த் தெரு வழியா விட்ட போது அந்த தெருக்காரங்க திரண்டு வந்து அங்கே ஒரு குட்டி மறியல் நடத்தினாங்க! ஊர்ருக்கு நல்லது செய்தால் வழி விமாட்டோம்.ஆர்ப்பாட்டமும்,போராட்டமும் பண்ணி ஊரை ரெண்டாக்குவோம்ன்னு சில சுயநலவாதிகளின் பேச்சைக் கேட்டு, இன்று ஒரு தெருவாசிகள் போராட்டத்தில் குதித்திருப்பது ஓர் தவறான முன் உதாரணமே! என்ன சொல்ல? ஒருவழிப்பாதையை ஓரு வழி பண்ணாமெ இவங்க ஓய மாட்டாங்க போலெ!
காவல்துறையும் தன் கடமையை ஒழுங்காகச் செய்தாங்க! பதட்டம்,கவவரம்ன்னு சீரியஸா போகவிடாமெ மிகுந்த கவனத்துடனும்,கட்டுப்பாடுடனும்,நிலமையைக் கையாண்டதைப் பாராட்டியே ஆகனும்!
ஆக,நகரில் விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் அல்லாஹ் பாது காத்தான்.அல்லத பட்சத்தில்,அதனால் ஏற்படும் விளைவும்,வேதனையும் நமக்குத்தானே? காரணம் நாம் வேறு,அவர்கள் வேறு அல்ல!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross