சொந்த நலனுக்காக பயன்படுத்தாமல் திறமைகளை சமுதாயத்துக்காக செலவழித்த மனிதநேயர் posted byLebbai (Zatni) (Riyadh)[15 February 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16924
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.
எங்கள் முஹல்லாவில் இருக்கும் சிறார்களை தீன்மார்க்கக்கல்வி கற்க ஆர்வமூட்டி உற்சாகப்படுத்தியவர்கள்.
காயல்பதியின் பாரம்பரியத்தையும், கண்ணியத்தையும் இளைய தலைமுறை பாதுகாத்திடும் பொருட்டு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள்.
நாங்கள் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கச்சபையில் மார்க்கக்கல்வி பயிலும் சமயத்தில், மதநல்லிணக்கம் என்று நாம் இன்று அறிந்துவைத்திருப்பதை அன்றே எங்களுக்கு கற்றுத் தந்தவர்கள்.
சமுதாயத்துக்காக தன்னை அர்பணித்து சேவை செய்தவர்கள். பல திறமைகள் இருந்தும் அனைத்தையும் தன் சொந்த நலனுக்காக பயன்படுத்தாமல் திறமைகளை சமுதாயத்துக்காக செலவழித்த மனிதநேயர்.
நாங்கள் எங்கள் தெருவில் விளையாடும் சமயம் முதல் இன்று வரை காணும்போதெல்லாம் ஒரு புன்சிரிப்பு செய்து அறிவுரை சொல்பவர்கள்.
மேலும், நமதூரின் சமுதாய ஒற்றுமைக்கும், மேம்பாட்டிற்கும், மதநல்லிணக்கத்திற்கும் பாலமாக விளங்கிய எங்கள் சபையின் செயலாளர் அவர்கள் மறைவால் நாங்கள் பெரிதும் துயர்கொண்டுள்ளோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.
அவர்கள் பிரிவால் வாடும் நகரத்தலைவர், குடும்பத்தார்கள், உற்றார்- உறவினர்கள், நம் சபையின் அங்கத்தினர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் ஷப்ருன் ஜமீல் என்னும் பொறுமையை தந்தருள வேண்டுகிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross