தொடர் சோதனைகள் posted byN.S.E. மஹ்மூது (Yanbu, Saudi Arabia)[19 December 2010] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1694
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இறைச்சிக் கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்தது வரவேற்கதக்கதே!
நோய் வாய்ப்பட்ட பிராணிகளின் இறைச்சியினால் பல கொடூரமான நோய்கள் உருவாகிறது. மேலும் இறைச்சிகள் விற்கும் இடங்கள் சுத்தமில்லாததாலும் பல நோய்கள் தாக்குகின்றன. அதனால் விதியை மீறி செயல்படுகிறவர்களுக்கு தண்டனைக் கொடுப்பதில் தவறில்லை.
இறைச்சிக்கடை உரிமையாளர் சங்கம் சார்பில் சகோதரர் செய்யத் இப்ராஹீம் கூறியக் கருத்து சிந்திக்ககூடியதே!
டிப்போவில் முத்திரைக் குத்தியதன் பின் இறைச்சி விற்பவரை தண்டிப்பதில் அர்த்தமில்லை.
தவறான முறையில் முத்திரையை குத்தி அனுப்பிய டிப்போவில் உள்ள ஊழியர்களைத்தான் தண்டிக்க வேண்டும்.
அதே சமயம் முத்திரை குத்தப்பட்ட இறைச்சி கெடுதலானது என்று தெரியவந்த பின் அதை சுகாதார அதிகாரிகள்
பறிமுதல் செய்யாமல் இருக்க எந்த முகாந்திரமும் இல்லை.
பறிமுதல் செய்த அதிகாரிகள் டிப்போ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே சிறந்த நடவடிக்கையாகும்.
இறைச்சிக்கடை உரிமையாளர்கள் சங்கமும் டிப்போ ஊழியர்கள் மீது புகார் செய்யலாம் மேலும் நஷ்ட ஈடும் கோரலாம்.
நகர் மன்ற உறுப்பினர் நோனா ஜாஃபர் சாதிக் இந்த சோதனை நடைபெற்றதை பற்றி கூறும்போது டிப்போவில் "முறையான" முத்திரையே தற்சமயம் இல்லை என்கிறார்.
டிப்போவில் அறுத்ததற்கான ஆதாரமே முத்திரைதான் அந்த முத்திரையே இல்லை என்றால் டிப்போ இருந்து என்ன பிரயோஜனம்???
இதை அவசியம் நகராட்சி மன்றம் கவனத்தில் கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உள்ள முயற்சிகளை நகர் மன்ற உறுப்பினர் நோனா ஜாஃபர் சாதிக் முன்னின்று செய்வார் என்று எதிபார்க்கிறோம்.
இந்த சோதனையை மேற்கொள்ள தூண்டியவர்களுக்கும், உத்தரவு பிறப்பித்த மாவட்ட ஆட்சியர், அறிவுறுத்திய அதிகாரி மற்றும் சோதனை செய்த அலுவலர்கள் அனைவர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதுடன், இன்றோடு இது நின்றுவிடாமல் தொடர் சோதனைகள் செய்து மக்களுக்கு நன்மையை செய்திட வேண்டுகிறோம்.
மேலும் இறைச்சிக்கடை மட்டும் என்றில்லாமல் ஹோட்டல்கள், மளிகைக் கடைகள் ஏன் மருந்துகள் விற்கக்கூடிய மெடிக்கல் ஷாப்கள் என்று பலதிலும் தொடர் சோதனையிட்டு கலப்படங்கள், சுகாதாரக்கேடுகள் ஏற்படுவதை தவிர்த்திட வேண்டுகிறோம். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross