Re:தேவை காயல்பட்டினம் நகர்மன... posted byMohamed Ali (Kuwait)[16 February 2012] IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 16975
சும்மா பொய் பேசிகிட்டு இருக்க கூடாது.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் ஒரு contractor ஆக பதியு பண்ண மனு கொடுத்து அவர்கள் கேட்ட எல்லா ஆவணங்களும் சமர்ப்பித்தும் மூன்று கூட்டங்களில் எனது மனுவை நிராகரித்தார்கள். ஏன் தெரியுமா ?
Member ஒவ்வருக்கும் Rs 1000/- கவரில் வைத்து கொடுங்கள் approve பண்ணி விடலாம் யன்று சொன்னார்கள். பதியு பண்ணவே Rs. 18000/- யன்றால். Contracts எடுத்தால் என்ன நிலைமையோ? இருந்தும் கொடுக்க ரெடி யன்று சொன்னோம். முதலில் approve பண்ணுங்கள் அடுத்த வினாடியே கொடுக்கிறோம் என்று. ஆனால் எனது மனு மீண்டும் meeting இல் வைக்கவே இந்த பணம் கொடுத்தால் தான் முடியும் யன்று சொல்லிவிட்டார்கள்.
அது போக பழைய contractor கள் எல்லாம் பெருநாள் மற்றும் பண்டிகை யன்றால் பெருநாள் சாமான்கள் என்று வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் அதையும் கவனித்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.
இதுபோக அதிகாரிகள் எல்லாம் எங்களையும் கவனித்துகொள்ளுங்கள் என்று இது வேற. பழைய ஒப்பந்த காரர்கள் யாரும் புதியவரை அனுமதிப்பது இல்லை.
பொய் சொல்லவில்லை மனு திரும்பி கூட பெறப்படவில்லை. அவர்கள் மேசயில் பாருங்கள் தூசு தட்ட படாமல் கிடக்கும்.
நான் மட்டும் இல்லை 2, 3 contractors எல்லருக்கும் இதே நிலைதான். எனவேதான் யாரும் interest காட்டுவது இல்லை.
சரி அது முந்தைய நிலை தற்போது புதிய members வந்து விட்டார்கள் நிலைமை மாறிவிட்டது என்று நினைகிறீர்களா இல்லை அதே நிலைதான் அவர்களுக்கு போடோக்கு போஸ் கொடுக்கவே டைம் பத்தாமல் இருக்கிறது.
பொய் சொல்லவில்லை 5 மாதங்களுக்கு முன்னால் கொடுத்த இரண்டு பெயர் மாற்றல் மனுகள் இன்னும் தூசு தட்ட படாமல் கிடக்கிறது ஏன் யன்றால் லஞ்சம் கொடுக்கப்படவில்லை. ஆனால் நேற்று கொடுத்த மனு இன்று முடிந்து கொடுக்கிறாக்கள் ஏன் யன்றால் தற்போதும் லஞ்சம்.
Interest உள்ளவர்கள் போய் check பண்ணி பாருங்கள்.
நான் ஏன் 5 மாதங்கள் ஆகியும் முயற்சி எடுக்கவில்லை என்று நினைகாதிர்கள். பல முறை நானும் எனது வீட்டில் உள்ளவர்களும் போயும் நடக்கவில்லை. நான் லஞ்சம் கொடுக்க தயாராக இல்லை.
நான் இந்த முறை தீர்வை ரசீது வரும் வரை காத்து கொண்டு உள்ளேன். வந்த பின்னால். நான் சேகரித்து வைத்துள்ள ஆவனகளோடு collector இடம் புகார் கொடுக்க உள்ளேன்.
என்னதான் நடக்கிறது என்று பார்போம். அல்லாஹ் போதுமானவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross