செய்தி: ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் பொருளாளர் ஹாஜி கே.வி.செய்யித் அஹ்மத் காலமானார்! புதுப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
K.V.A.T.குடும்பத்தின் மூத்த தந்தையின் பிரிவு ...நிரப்ப முடியாத இழப்பு ! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[20 February 2012] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 17083
எங்கள் பாசத்துக்குரிய பெரியப்பா K.V.S.A. அவர்கள் எங்களை எல்லாம் விட்டு பிரிந்த செய்தியை அறிந்து மிகவும் வருத்தம் அடைகிறோம். வாழ்க்கையின் யதார்த்த நிலையை வாழ்ந்து காட்டியவர்கள். ஹலால் ஹராம் பேணுவதில் கண்டிப்பு காட்டியவர்கள். திரு மறையை மனனம் புரிந்து, தன் முதுமை பருவத்திலும் , சதாவும் ஓதிக்கொண்டே இருந்தவர்கள்.கடைசிவரை சுன்னத்தை பேணுவதில் கூடிய வரை கவனம் செலுத்தியவர்கள். சதாவும் தொப்பி அணிந்தவர்களாகவே காட்சி தந்தவர்கள். பொது வாழ்விலும் சரி... தனிப்பட்ட சொந்த வாழ்விலும் சரி...கணக்கு வழக்குகளில் கண்டிப்புடன் காணப்பட்டவர்கள். யாரிடமும் வம்பு தும்பு செய்து அறியாதவர்கள். தன்னால் இயன்றவரை பிறருக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி , எத்தனையோ பேருக்கு நல்ல ஆலோசகராக திகழ்ந்தவர்கள். எங்கள் வாழ்விலும் நல்ல பல வகைகளில் முன் மாதிரியாக திகழ்ந்தவர்கள். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் அவர்களின் வாழ்வின் அடிச்சுவட்டை...
எங்கள் தந்தையார் அவர்களின் மறைவுக்கு பிறகு அவர்களின் முகத்தில் தான் நாங்கள் எங்கள் தந்தையாரை கண்டு கொண்டிருந்தோம். எங்கள் தாயார் அவர்களை தன் சொந்த மகள் போன்று பாசம் காட்டி அன்பு செலுத்தியவர்கள் . இன்று அன்னாரையும் இழந்து தவிக்கிறோம். அல்லாஹ்வின் நாட்டப்படி மறு உலக வாழ்வை அடைந்த பெரியப்பா அவர்களின் அனைத்து நல்ல அமல்களையும் வல்ல ரஹ்மான் மிகவும் கிருபையோடும் , இரக்கத்தோடும் அங்கீகரித்து , கப்ருடைய வாழ்வில் சுவனத்து சுகந்தத்தை நுகர்ந்தவர்களாக , மறுமை நாளில் , எங்கள் நபிகளாரின் பரிந்துரையோடு(ஷ ப்பா அத்), அவர்களின் திருக்கரம் பற்றியவர்களாக சுவனத்தின் உயர்ந்த பதியை அடைய , கண்ணீர் மல்க , இரு கரம் ஏந்தி வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறோம் .
அன்னாரை பிரிந்து வாடும் எங்கள் குடும்பத்தார் அனைவரின் மனதிலும் சப்ரன் ஜமீலா வெனும் அழகிய பொறுமையை கொண்டு அல்லாஹ் நிரப்புவானாக !
மர்ஹூம் பெரியப்பா அவர்களின் அருமை சகோதரர்கள் , சகோதரிகள் (எங்கள் பெரியப்பா மார்கள் மற்றும் மாமி மார்கள் ), அருமை மக்கள் , மறு மக்கள் , பேரபிள்ளைகள் மற்றும் எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் அன்பு கலந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹி வபரக்காதுஹு (உண்டாவதாக .) தெரிவித்துக் கொள்கிறோம் .
மிகவும் வருத்தத்துடன் ,
அருமை மக்கள் ,
K.V.A.T.செய்யத் அஹமது கபீர் ,
K.V.A.T.ஹபீப் முஹம்மத் ,
K.V.A.T.முத்து ஹாஜரா,
K.V.M.A.C.மக்தூம் முஹம்மத்
தம்பி K.V.தாஹிர் மனைவி , தம்பி வழி மருமக்கள் ,பேரன்மார்கள்.பேத்திமார்கள்
மற்றும் குடும்பத்தார்கள்
முத்து மஹால்,
குறுக்குத்தெரு ,
காயல் பட்டணம், துபாய் & கத்தார் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross