செய்தி: திருவிதாங்கோடு நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் காயல்பட்டினம் இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்பு! சர்ச்சைக்குரிய புதினமெழுதிய எழுத்தாளரின் கருத்து மறுதலிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தேவயற்ற ஓர் கருத்தரங்கம்...வேதனைக்குரியது!! posted byM.N.L.முகம்மது ரஃபீக், ஹிஜாஸ்மைந்தன். (காயல்பட்டணம்.)[24 February 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 17148
மன்னிக்கவும்!
தங்கள் வலைதளம் திருவிதாங்கோட்டில் நடந்த கருத்தரங்கில் கறுப்பாயி என்ற நூர்ஜஹான் எனும் நூலாசிரியர்,அன்வர் பால சிங்கத்தின் முழுமையான விரக்திப் பேசையும், இஸ்லாமியர்களை அவர் விமர்சித்ததையும் தெளிவாக தாங்கள் வெளியிடவில்லை! வெளிப்படையாகப் பார்க்கும் போது அவரது கூற்று உண்மையாகவே தோன்றும் ஆனால்,உள் நோக்கமும்,அதை வெளிப்படுத்தும் முறையில் தான் பிரச்சனையே,இதோ அவர் பேசிய பேச்சைக் கேளுங்கல் புரியும்,
“'நான் எம்.ஏ. வரலாறும், அரசியலும் படித்தவன். இஸ்லாத்தின் மீதுள்ள தீராக்காதலில் 93-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் நாள் இஸ்லாத்தை தழுவினேன். ஒரு எழுத்தாளர் எனில் அவர் 'பொன்னியின் செல்வன்' போன்ற பெரிய பெரிய காவியங்களை படைக்க வேண்டும் என்றோ, அல்லது சுஜாதா மாதிரி எழுதவேண்டும் என்றோ பொருள் அல்ல.
ஜாதீய உணர்வுகள் என்றுள் ஏற்படுத்திய மன உளைச்சலில் அது தந்த தீராவலியில் எழுத வந்தவன் நான். சாதீயக் கொடுமையினால் மீனாட்சிபுர மக்கள் கூட்டாக மதம் மாறினோம். இன்று நகரங்களில் சேரியையும் இஸ்லாமியர்களின் குடியிருப்பையும் பிரிக்க முடியாத அளவில் அந்த இரண்டு சமூகங்களும் மற்றவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். ஜாதிகளை அடையாளம் காணவேண்டும். நான் மதம் மாறினேன்.
விடுதலை கிடைத்தது. என்னை உச்சிமேல் தூக்கி வைத்து கொண்டாடினர். ஆரம்பத்தில் என்னை அள்ளி அணைத்த கைகள், பிரச்சனைக்குரிய இந்த புத்தகத்தை எழுதியதும், அதை படிக்காமலே கருத்து சொல்கின்றனர். திண்டுக்கல் ரஷீத் என்பவர் 'நீ ஏன் இங்கு (இஸ்லாத்திற்கு) வந்தாய்? எனக் கேட்டார். நான் 'உங்கள் வீட்டுக்கா வந்தேன்? ஏன்று பதில் சொன்னேன்.? இப்போதும் கூட என்னை உங்கள் ஊரில் உள்ள ஓரு ஐயர் 'பிரியாணிக்கு மதம் மாறியவன்' என்று கேவலப்படுத்தி பேசி வருகிறார். வெளிநாட்டு பணம் வந்ததது என்கிறார்கள்.
இந்த அவதூறுகளுக்கு உங்களில் யாரும் பதில் சொல்லவில்லை. மீனாட்சிபுரம் வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை. கேள்விகளை நான் வைப்பதை விட, நீங்கள் வைத்திருக்க வேண்டும். நான் மதம் மாறியதால் என் தாய், தந்தை, தங்கை என என்; குடும்பமே என்னைக் கைவிட்டு விட்டது. நீங்களாவது என்னோடு கை சேர்க்க வேண்டும். மாறிய உலகம் மிகக் கொடுரமானது. இருபுறமும் என்னைக் கைவிட்டுவிட்டனர். என்னுள் ஏற்பட்டுள்ள வலிகள், ரணங்கள் ஆற வேண்டும்” என்று பேசியுள்ளார். எனவேதாம் காயல் சமூக ஆர்வலர்கள் உடனேயே மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இலக்கியம் பேசப் போய் இலட்சியம் பறிபோனதைப் போல் இந்த நிகழ்ச்சி தேவையற்ற ஒன்றகத்தான் படுகின்றது. இன்று ,யார் தான் உண்மை நிகழ்வுகளை இலக்கியத்தில் உண்மயாகப் பதிக்கின்றனர்? சமூகத்தில் எத்தனையே பிரச்சினைகள் தலை விரித்தாடுகின்ற போது இலக்கியவாதிகள் வெறும் ஏட்டு சுரைக்காயை வைத்துக்கொண்டு என்ன செய்ய இயலும்? பதிவுகள் தற்காலதில் வெறும் படிவுகளாகவே பதிக்கப்படும் போது பாதிக்கப்படுவது,பாவம் சமுதாயம் மட்டுமே!
ஜாதீய உணவுகள் ஏற்படுத்திய தீராவலி மூலம் தீன் நெறியை ஏற்ற அன்வர் பாலசிங்கத்தின் பேச்சு பொறுப்பற்றதாகவே உள்ளது. நீங்களாவது என்னோடு கை சேர்க்க வேண்டும். மாறிய உலகம் மிகக் கொடுரமானது. இருபுறமும் என்னைக் கைவிட்டுவிட்டனர். என்னுள் ஏற்பட்டுள்ள வலிகள், ரணங்கள் ஆற வேண்டும் என ஆதங்கப்படும் அவர் அல்லாஹ்வை இன்னும் முழுமையாக நம்ப வில்லை போலும்! ஈமானில் உறுதி இருந்தால் இவையாவும் அவருக்கு கால் தூசியாகத் தான் தோன்றியிருக்கும். இதற்கு சாளை-எஸ்.எம்.ஏ.பஷீர் கூறிய விளக்கம் மிகச் சரியாக இருந்தது.
யாரும் யாருக்குத் துணையில்லா விடினும் ஏக வல்லோனின் துணை என்றென்றும் இருக்கும் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்...!!!
மொத்தத்தில் எழுத்தாளர்கள் இலக்கிய குப்பைகளை கிளறியிருப்பது நன்றாகத் தெரிகின்றது!
-ராபியா மணாளன்.காயல்பட்டணம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross