பரீட்சைக்கு படிப்பது பள்ளிக்கூடத்தில் அல்ல அவரவர் வீடுகளில்தான் posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் )[27 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17237
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
என்னுடைய கருத்து அரசியல் அல்ல - எனக்கு அரசியல் விருப்பமுமல்ல.
முதலமைச்சர் அவர்கள் 10 ஆவது 12 ஆவது வகுப்பு மாணவ, மாணவியருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதால், அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் , தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் வகையில், அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு பெற்று வழங்கும் , ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உட்பட அனைத்துச் செலவையும் அரசே ஏற்கும் என்றும்
இதே போன்று அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொள்ளலாம். அதற்கு ஏற்படும் கூடுதல் செலவினை அரசு அவர்களுக்கு ஈடு செய்யும் என்றும் அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பு கேட்பதற்கும் , பார்ப்பதற்கும் நல்லது போல் தெரிகிறது ஆனால் 10 % கூட பிரயோஜனம் இருக்காது.
-----------------------------------------
வீடுகளுக்கு மின்சாரம் தேவை
மாணவ , மாணவியர்கள் தேர்வு எழுதவதற்கு முன்பு படிக்க வேண்டுமே! பள்ளிகளில் பாடங்களெல்லாம் முடிந்து விட்டது, தேர்வுக்கு ஒரு வாரமே இருக்கின்றது. அவர்கள் எல்லாம் பாடங்களை திரும்பத் திரும்ப புரட்டிப் பார்த்து படிப்பதிலேதான் இரவு, பகலாக இருக்கின்றார்கள்.
பாடங்களை படிப்பது பள்ளிக்கூடத்தில் அல்ல அவரவர் வீடுகளில்தான் எனவே மின்சாரம் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுடைய வீட்டுக்கும் தேவை. ஆகையால் மாணவ , மாணவிகளுடைய தேர்வுக்கு பாதிப்பு வரக்கூடாது என்றால் அவசியம் தேர்வு நேரத்தில் வீடுகளுக்கு மின்சாரம் தேவை.
-------------------------------------------
மாணவர்களுக்கு மன உளைச்சல்
மேலும் இந்த வருடம் பள்ளிக்கூட ஆரம்பத்திலேயே நம் மாணவர்கள் சமச்சீர்க் கல்வி பிரச்சனையால் பாதிக்கப்பட்டார்கள். அந்த பாதிப்பு இன்னும் நீங்கவில்லை. அவைகளை ஒருவாறு சமாளித்து ஏதோ ஓரளவு படிக்கலாம் என்றால் தொடராக மின்சாரம் தடை பெற்றுக்கொண்டிருந்ததன் காரணமாக முடியவில்லை. அந்த மாணவர்களுக்கு மன உளைச்சல் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
----------------------------------------------
இது முறையாக நடக்க முடியாத காரியம்
சரி அதெல்லாம் போகட்டும் இப்பொழுது அரசாங்கம் செய்திருக்கிறபடி எல்லா பள்ளிகளுக்கும் ஜெனரேட்டர் கிடைக்கவா போகிறது நிச்சயமாக கிடைக்காது.
தேர்வுக்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன இந்த எட்டு நாட்களில் அரசு பள்ளி , தனியார் பள்ளி அப்புறம் ஜனரேட்டர் , டீசல் அது, இது என்று பல குழப்பங்கள் உண்டு , அதில் ஊழல்களும் உண்டு என்பதால் இது முறையாக நடக்க முடியாத காரியம்.
ஆகையால் ஜெனரேட்டர் வாடகைக்கு எடுப்பது, டீசல் செலவை அரசு ஏற்பது என்பது எல்லாவற்றையும் ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு மின்சாரத்தை எந்த வகையிலாவது விநியோகித்தால்தான் அது அந்த மாணவ, மாணவியரின் படிப்புக்கு உதவியதாக இருக்கும் .
இதை அரசு செய்யுமா?.
எது எப்படியோ நம் அன்பு மாணவமணிகள் அனைவரும் நல்ல முறையில் தேர்வுகளை எழுதி அதிகமான மதிப்பெண்களை பெற்று தேர்ச்சிப் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி வேண்டுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross