ஏதோ இங்கு மட்டும் தான் ஆக்கிரமிப்பு உள்ளது என்று நாம் யாரும் மார்தட்டி கொண்டால் அது சிறு புள்ளைத்தனம்.. posted byசட்னி .செய்யது மீரான் (ஜித்தா ..)[27 February 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17245
அஸ்ஸலாமு அலைக்கும்..
அன்றாடங்காய்ச்சிகள்,ஏழைகள் பெரும்பான்மையாய் உள்ள பகுதி.
இந்த சம்பவம் மூலம் இருந்ததை இழந்து பாதிக்கப்பட்டு
மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள நம் மக்களுக்கு
நாம் ஆறுதலாக இருப்பது காயலர்களாக அதுவும் முஸ்லிம்களாக பிறந்த நம் அனைவர்கள் மீதும் ஆகுமானதாக உள்ளது..
இக்கால சூழ்நிலையில் ஒரு சிறு கட்டிடம் கட்டுவதற்கு
ஏற்படும் செலவுகள்,சிரமங்கள்,சிக்கல்கள் எத்தனை உள்ளது..
என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.
இத்தனை காலம் அகற்றாத (விழிக்காத,இடிக்காத )அரசு அதிகாரிகள் இப்பொழுது கச்சை கட்டி களத்தில் இறங்கி
காரியம் ஆற்றி உள்ளார்கள்..
எல்லோருக்கும் பொதுவான நமது நகர் மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் (இவர் இந்த பகுதி மக்களால் உறுப்பினர் ஆனவர் )
இந்த மக்களுக்கு ஆறுதலும் ,அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனையும்
கூறும் தகுதி உடையவர்கள் இவர்கள்,
இந்த இக்கட்டான நிலைமையில் இவர்கள் இங்கு வந்தார்களா??
என்பது அல்லாஹ்விற்கு வெளிச்சம்..
ஏதோ இங்கு மட்டும் தான் ஆக்கிரமிப்பு உள்ளது என்று
நாம் யாரும் மார்தட்டி கொண்டால் அது சிறு புள்ளைத்தனம்.
கடந்த 30 ,40 வருடங்களுக்கு முன்னர் நாம் சிறு பிள்ளைகளாக
இருந்த சமயம் விசாலமாக,விரிவாக இருந்து
ஆடி,ஓடி விளையாடிய நம் தெருக்கள்
இன்று குறுகலாக சுருங்கி போய் உள்ளதை என்ன சொல்வது???????
நம் ஊரில் புற்று நோயின் தாக்கத்தினால்
பல மக்களின் விலை மதிக்க முடியாத
உயிர்களை கொள்ளை கொல்வதை
நாம் அன்றாடம் காண்கின்றோம் அல்லது அறிகின்றோம்..
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக
நம்மால் முடிந்த உதவிகளை செய்வதோடு
படைத்த ரஹ்மானிடம் மனமுருக பிரார்த்தனையும் செய்கின்றோம்.
எல்லா மக்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன்..
நம் ஊரில் இந்த கொடிய புற்று நோயை
விட மிக மிக மிக வேகமாக பரவி வரும் புதிய நோய்
பொது மக்களுக்கு உண்டான,உரிமையான
தெருக்களில் காம்பவுண்ட் சுவர் எழுப்புதல்.
மிக பெரிதாக படி கட்டுதல்,கழிவு நீர் தொட்டி கட்டுதல்
(இதை விட பலால் நீர் கொட்டுதல்,குப்பை வீசுதல் வேறு )
என அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு ஆக்கிரமிப்பு செய்துள்ளதை
நாம் அனைவரும் கண்டும்,சிலர் செய்தும் வருகின்றோம்..
அடுத்தவர் நிலத்தில் ஒரு அங்குலம் இடம்
எடுப்பவனின் நிலை மண்ணறையிலும்,மறுமையிலும்
என்ன நிகழும் என்பதை இறைவனும்,அவனது இறுதி தூதரும்
எடுத்து இயம்பியதை பல முறை நம் மார்க்க மேதைகள்
சொன்னதை கேட்டவர்கள் ஆனால் செயல்படுத்த தான் முடியாதவர்களாக முடங்கி போய் உள்ளோம்..
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்,
தீய வினை விதைத்தவன் தீயதையும்,
நல்லதோர் தி(தீ)னைவிதைத்தவன் நல்லதையும்,
பெறுவார்கள் என்பது என்றுமே உண்மையானது..
இதை யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லாது
பண்படுத்தவும்,விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சிறு தூண்டுதல் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross