Re:ஒருவழிப்பாதை வழித்தடத்தில... posted bymackie noohuthambi (colombo)[28 February 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17248
வரவேற்கக்கூடிய துணிச்சலான நடவடிக்கை. ஆனால் இந்த தெருவோடு இந்த ஆக்கிரமிப்பு வேலைகள் நின்று விட்டால் அது பழிவாங்கும் செய்திபோல் ஆகிவிடும். பிரதான சாலையில் அஞ்சல் அலுவகத்துக்கு அடுத்தாண்மையாக உள்ள கட்டிடங்கள் பற்றியும் மக்கள் யோசிக்கிறார்கள்.
அதே சமயம் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளனவே, என்ன வரைமுறை அல்லது ஆங்கிலத்தில் சொல்வதானால் WHAT IS THE YARDSTICK THE CONCERNED OFFICIALS HAVE FIXED FOR THE "ENCROACHMENT" என்று வீட்டு உரிமையாளர்களுக்கு தெளிவாக சொல்லி இருக்கிறார்களா, பக்கத்தில் உள்ள நகை கடைகள், தர்காக்கள் பள்ளிக்கூடங்கள் இவை எல்லாம் பத்திரமாக இருக்கின்றனவே, இறை நேச செல்வர்களின் சாபம் உண்டாகிவிடும் தெய்வ நிந்தனைக்கு ஆளாகிவிடுவோம் என்று பயந்தார்களா அல்லது கல்விக்கூடங்களை இடிப்பதால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படும் என்று பச்சாதாபப்பட்டு அவற்றை இடிக்காமல் வாளாவிருந்தார்களா ஒன்றும் புரியவில்லையே.
பாதிக்கப்பட்டவர்கள் நீதி மன்றத்தை அணுகினால் நீதி என்ன அவ்வளவு இலகுவில் கிடைத்துவிடுமா நமது நாட்டில். இஸ்லாமிய கலீபாக்கள் ஆட்சியா நடக்கிறது இங்கே, சட்டத்தை கையில் எடுத்துக்கொள்பவர்கள், கொலைகாரர்கள் கொள்ளைக்காரர்கள் உடனடியாக தண்டிக்கப்பட்டால் கூட அவர்களுக்காக வக்கலாத்து வாங்கும் அரசியல் கட்சிகள், வழக்குரைஞர்கள் வாழும் மிக பெரிய ஜன நாயக நாடல்லவா நம் நாடு. எனவே பாதிக்கப்பட்டவர்கள் பொறுமையுடன் இருங்கள். இடிபாடுகள் அகற்றப்பட்டு ஒரு முடிவுக்கு வந்தபின் உங்கள் இடங்களை செப்பனிடுங்கள். உங்கள் பக்கம் நியாயம் இருக்குமானால் அல்லா உங்களுக்கு இந்த இடத்தின் பெறுமதியை உயர்த்தி உங்களை மகிழ்ச்சியுற செய்வான்.
VAL FAJR என்ற சூராவில் இறைவன் கூறுவதைப்போல், உங்களுக்கு வாழ்வாதரங்களை நல்லபடி அமைத்து தந்தால் , இது நான் சம்பாத்தியம் செய்தது என்னால் நடந்தது என்கிறோம். அவன் நமக்கு சோதனை ஏற்படுத்தினால் இறைவன் என்னைக்கைவிட்டு விட்டான் என்று பிரலாபிக்கிறோம். நல்லது நடக்கும்போது அல்லாஹ்வை ஷுக்று செய்வதும் சோதனைகள் வரும்போது பொறுமையுடன் இருந்து அல்லாஹ்விடம் உதவி தேடுவதும் ஒரு மூமினுக்கு அழகு. அல்லாஹ் மிக அறிந்தவன்.
பொறுமையுடன் இருப்பவர்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம். நாம் என்ன கொண்டு வந்தோம் இழப்பதற்கு. நேற்று ஒருவனுடைய் பொருள் இன்று என்னுடையது. நாளை அது வேறு ஒருவனுக்கு சொந்தமாகலாம். இது தத்துவம் அல்ல, அல்லாஹ்வில் தீர்ப்பு. வீடு இழந்தவர்களை அல்லாஹ் கை தூக்கி விடுவான் பொறுமையாக இருங்கள். மன வேதனையுடன் மக்கி நூஹுதம்பி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross