தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது. posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[28 February 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17277
இன்று இரவு என் சிறிய மகன் போனில் வினவினான்..
"வாப்பா... ஆட்டோவிலே என்னமோ பணம் கட்டுங்கோ, பணம் கட்டுங்கோ என்று சொல்லிக்கொண்டு போனார்களே. எதுக்கு வாப்பா.."
அது ஒன்றும் இல்லை, சொத்து வரி, தொழில் வரி, தண்ணீருக்கு கட்டணம் ஆகியவைகளை கட்டனுமாம் என்று விளக்கமாக சொன்னதும், அவனுக்கு சொத்து வரி, தொழில் வரி ஆகியவைகளைப்பற்றி ஒன்றும் புரியவில்லை. ஆனால் தண்ணீர் கட்டணம் மட்டும் புரிந்து, மீண்டும் ஒரு கேள்வி கேட்டான்...
" வாப்பா.. நாமோ குடிக்க செந்தூர் தண்ணீர் வாங்குகிறோம், மற்ற வேலைகளுக்கு கிணற்றில் மோட்டார் போட்டு எடுக்கிறோம்... அப்போ எதற்கு அவங்க தண்ணீருக்கு பணம்கட்ட சொல்லுறாங்க.. !!"
எனக்கு தான் பதில் சொல்ல தெரியவில்லை... தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross