இறைக்க, இறைக்கத்தான் கிணற்றுத் தண்ணீர் ஊற்றெடுத்து பெருகும்! உங்கள் செல்வமும் அது போலத்தான்...!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். ஹிஜாஸ்மைந்தன். (காயல்பட்டணம்)[29 February 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 17296
இம் மதரஸாவுக்காக எவ்வித பிரதிபலனும் இன்றி தம் உடல் உழைப்பை அர்ப்பணித்து வரும் எத்தனையோ நல்ல உள்ளங்கள், ரகீபாக்கள், ஆசிரியர், ஆசிரியைகள், குறிப்பாக சகோதரர் அபுல் ஹஸன் கலாமி, மற்றும் அவரது துணவியார் அவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய நற் கூலியை இம்மையிலும், மறுமையிலும் வழங்கியருள்வானாக!
இக் கல்லூரியின் விடுதியில் உள் வளாகத்தில் கோடை காலங்களில் வீசும் அனல் காற்றால் அறைக்குள் வெந்து வெம்ம்பிக் கிடக்கும் மாணவியர்களின் நிலமை வருத்தத்திற்குரியதே!
அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி இலாப நோக்கு இன்றி மார்க்க கல்வியை இஸ்லாமிய சமுதாயத்தின் மகளிர் தமக்கு அளித்து வரும் இக் கல்லூரி போற்றப் படக்கூடியதே! பல சிரமங்களை மேற்கொண்டாலும் அதையெல்லாம் தாங்கி ஓர் இலட்சிய பாதையில் வழி நடத்திச் செல்லும் அதன் நிவாகிகள் யாவரும் தியாகிகள் தாம்! நல்லோர்களே! தனவந்தர்களே! அல்லாஹ் உங்களுக்குத் தந்துள்ள செல்வத்தை அவனுக்காக அவன் விரும்பும் வழியில் செலவு செய்யுங்கள். உங்களைப் பொருத்தவரை எட்டு இலட்சம் என்பது பெருந் தொகை அல்ல. ஈகை குணத்தால் வாரிவழங்குங்கள்! இறைக்க இறைக்கத்தான் கிணற்றுத் தண்ணீர் ஊற்றெடுத்து பெருகும்! உங்கள் செல்வமும் அது போலத்தான்.
மாணவியர்களின் சிரமங்களை மனதில் கொண்டு மனமுவந்து தாராளமாக உதவுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு நிச்சயம் உதவுவான். இன்ஷா அல்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross