Re:மார்ச் 03 அன்று தூத்துக்க... posted bymackie noohuthambi (colombo)[02 March 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17337
என்ன வேடிக்கையான விடுமுறை நாட்கள். நாட்டுக்கு சுதந்திரம் தேடித்தந்த தலைவர்கள் பிறந்த நாள், இறந்த நாள்கள் விடுமுறை என்று இருந்து, பின்னர் அரசியல் கட்சி தலைவர்கள் என்று விரிந்து இப்போது அய்யா பிறந்தநாள் அம்மா பிறந்த நாள் என்று போய்கொண்டிருக்கிறதே,
எங்கள் ஊரில் இறை நேச செல்வர்கள் பிறந்த நாள்கள் நிறய இருக்கின்றன, நாகூர் ஆண்டவர்கள், பொட்டல்புதூர் ஆத்தங்கரை நாச்சி என்று பல் வேறு மாமனிதபுனிதர்கள் பிறந்த நாள்களுக்கும் விடுமுறை விடுங்கள். கிறிஸ்தவ சமுதாய தலைவர்கள் பிறந்த நாள் இறந்த நாள்களும் வருகின்றன, வருடம் 365 நாட்களும் யாராவ்து பிறந்து கொண்டும் இறந்துகொண்டும் தான் இருப்பார்கள் இது இறைவனின் நியதி. இப்படியே விடுமுறைகள் தொடர்கதையானால் நாட்டின் உற்பத்தி முன்னேற்றம் கல்வி பாதிக்கப்படாதா,
ஏற்கெனவே மின் வெட்டால் தமிழகம் 19m நூற்றாண்டுக்கு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறதே, புதிய ஆட்சி தலைவர் பகுதறிவுப் பாசரையில் வளர்ந்தவர், துணிச்சலாக செயல்லாற்றக்கொடியவர் என்றெல்லாம் அவரது நடவடிக்கைகள் கட்டியம் கூறியதெல்லாம் மாயைதானா? கலெக்டர் சார், விடுமுறைகளுக்கு கொஞ்சம் விடுமுறை கொடுங்கள் சார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross