சுயசான்றிதழ் posted byN.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia)[22 December 2010] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1739
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
கதிர்வீச்சு அளவை பரிசோதனை செய்து "சுயசான்றிதழ் வழங்கிக்கொள்ள வேண்டும்" என்று இந்திய அரசாங்கம் மொபைல் கோபுர உரிமையாளர்களுக்கு உத்திரவு பிறப்பித்திருப்பதாக அமைச்சர் கூறியிருக்கிறார்.
மொபைல்களின் கதிர்வீச்சை அறிந்துக்கொள்வதற்கு
கிடைத்திருக்கும் முதல்படி இது, இதை வரவேற்கிறோம்.
மொபைல் கோபுர உரிமையாளர்களே பரிசோதித்து சுயசான்றிதழ் "வழங்கிக்கொள்ள" வேண்டும் என்றுதான் உத்தரவு, சான்றிதழை வாங்கி, அதனை அது சம்பந்தமான அலுவலகத்தில் "ஒப்புவிக்க" வேண்டும் என்ற உத்தரவு இல்லை.
அதனால் இந்த நடவடிக்கை எந்த அளவு பயனளிக்கும் என்பதை இறைவனே அறிவான்.
நமக்கு அருகாமையில், நமது ஊரில் உள்ள மொபைல் கோபுரங்களின் கதிர்வீச்சு எந்த அளவில் உள்ளது? அதனால் நமக்கு ஏதும் பாதகம் உண்டா? என்பதை அறிந்து, அதை நிவர்த்தி செய்வதே நமது கடமையாக இருக்க வேண்டும்.
இந்த செய்திக்கு ஏதாவது பிரயோசனமான, ஆக்கப்பூர்வமான கருத்துக்களை நம் மக்கள் கொடுத்துப் பயனடைவது நல்லது.
மொபைல் கோபுரம் வைத்துள்ளவர்களிடமே அதன் கதிர்வீச்சு சான்றிதழ் "நகலை" நமது ஐக்கிய பேரவை கேட்டுப்பெறலாம்.
முடியாத பட்சத்தில் நமது நகராட்சி மன்றம் கேட்டுப்பெறலாம். நகராட்சி மன்றத்தின் வேண்டுதலுக்கு மறுக்க வாய்ப்பில்லை.
அப்படி மறுக்கும் நிலை ஏற்பட்டால் அந்த கோபுரங்கள் நம் நகரிலே இருக்க அருகதை இல்லை. அந்த சான்றிதழ் நகலை பெற்று அதன் உண்மை நிலையை அறிந்து அதன்படி செயலாற்றுவது நல்லது.
இதை சம்பந்தப்பட்டவர்கள் முயற்சித்து செயலாற்றுவார்கள் என்று நம்புவோமாக. வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross