செய்தி: பிள்ளைகளுக்காக பெற்றோர் சில தியாகங்களைச் செய்தேயாக வேண்டும்! இக்ராஃ கலந்தாலோசனையில் தலைமையாசிரியர்கள் வலியுறுத்தல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கேபிள் டிவி. உரிமையாளர்கள் posted byN.S.E. மஹ்மூது (Yanbu, Saudi Arabia)[22 December 2010] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1749
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இக்ராஃ சிறப்பான, சிறந்ததொரு கூட்டத்தை கூட்டி தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடியது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதிலே கலந்துக்கொண்ட அனைவர்களுடைய கருத்துக்களும் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் பார்க்கையில் சிறப்புடையதே!
ஆசிரியர்கள் தரப்பிலே, அவர்கள் தினமும் சந்தித்து வருகின்ற பிரச்சினைகளை எப்படி சொல்வது, யாரிடம் சொல்வது என்று மூடி மறைத்தவைகள் எல்லாம் இன்று இக்ராஃவின் இந்த கலந்தாலோசனையால் வெளியாகிவிட்டது. இதன் மூலம் பெற்றோர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் நிறைய படிப்பினைகள் கிடைத்திருக்கிறது. இந்த செய்தியை படிக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது நல்ல பயனைத்தரும்.
------------------------------------------------
பள்ளிக்கூட நிர்வாகம் :-
தலைமை ஆசிரியர்கள் அவ்வப்போது "பெற்றோர்கள் - ஆசிரியர்கள்" கூட்டத்தை பொதுவாக கூட்டி கருத்துக்களை பரிமாறிக்கொள்வது சிறப்புடையது.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை பெற்றோர்களை அழைத்து பொதுவான கலந்துரையாடல் இல்லாமல் தனியாக மாணவரையும் அவருடைய பெற்றோரையும் வைத்து "வகுப்பு ஆசிரியர்" கலந்துரைத்தால் மிகவும் பயனளிக்கும். இது நடைமுறை சாத்தியமா என்பதை பார்க்கவும்.
---------------------------------------------
பெற்றோர்கள் :-
தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்கிறார்களா? சரியான நேரத்தில் பள்ளிக்கூடம் செல்கிறார்களா? திரும்பி வருகிறார்களா? என்பதை
கண்காணித்து வரவேண்டும்.
தயவு செய்து சொல்லாதீர்கள் "எங்கள் பிள்ளைகள் எல்லாம் நல்ல பிள்ளைகள், நாங்கள் அப்படி ஒன்றும்
மோசமாக வளர்க்கவில்லை என்று" கால சூழ்நிலை மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பெற்றோர்களே உணருங்கள்.
அவசியம் ஒவ்வொரு பெற்றோர்களும், பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்து அவ்வப்போது உங்கள் பிள்ளைகளின்
நிலைகளை அறிய வேண்டும்.
அது மட்டுமல்லாது பெற்றோர்கள், வகுப்பு ஆசிரியர்களை சந்தித்து தங்கள் குழந்தையின் படிப்பு, ஒழுங்குகளை பற்றி நேரில் கேட்டு தெரிந்திருக்க வேண்டும், இந்த சந்திப்பு குறைந்தது இரண்டு மாதத்திற்கொரு முறை இருக்க வேண்டும்.
மேலும் எல்லோரும் கூறுவது போல் பரீட்சை நேரத்தில் கேபிள் டிவி. ஏன் டி.வி.யை பார்ப்பதையே தவிர்த்து உங்கள் குழந்தைகளின் படிப்புக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவி ஒத்தாசை செய்யலாமே. இது ஒன்றும் முடியாத காரியமில்லை.
நம்ம ஊரில் சில பெற்றோர்கள், பிள்ளைகள் படித்து முடியும்வரை டிவி. வாங்குவதில்லை என்று உறுதியாக இருந்து பிள்ளைகள் எல்.கே.ஜி.யிலிருந்து தொடங்கி மாஸ்டர் டிகிரி வாங்கிய பின்னும் டிவி வாங்கி வைக்காத வீடுகளும் உண்டு. அதனால் உங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக குறைந்தபட்சம் பரீட்சை நேரத்திலாவது டிவி. பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
----------------------------------------------
கேபிள் டிவி. உரிமையாளர்கள் :-
பொதுவாக கேபிள் டிவியினால் மக்களுக்கு அதிகமான கேடுதான் என்பது கேபிள் டிவி நடத்துபவர்களிலிருந்து அனைத்து தரப்பு
மக்களும் அறிந்ததே! இதிலே யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது.
என்னுடைய வேண்டுகோள்! என்னவென்றால் கேபிள் டிவியை நடத்துபவர்கள், பரீட்சை காலங்களில் "செய்தியைத் தவிர" வேறு எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒளிபரப்புவதில்லை என்று உங்கள் சங்கத்தின் மூலம் முடிவு செய்து செயல்படுத்தலாமே.
இதனால் மாணவர்கள் மனம் சிதறாமலும், பெற்றோர்கள் கவனமும் பிள்ளைகள்மீது இருக்கும். நம் மக்களின் வாழ்வு சிறந்ததாக அமைய வழி பிறக்குமே. எனவே கேபிள் டிவி உரிமையாளர்கள் உதவிடுவீர்களா!!!???.
--------------------------------------------
மாணவமணிகளே! :-
என் அன்பார்ந்த மாணவமணிகளே, நீங்கள் ஒவ்வொருவரும் பரீட்சை நேரத்தில் கஷ்டப்பட்டு படிக்கிறீர்கள், ஆனால் பரீட்சை எழுதும்போது படித்தது அத்தனையும் ஞாபகத்துக்கு வருவதில்லை, சிலதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. இதனால் உங்களுக்கு மார்க்கு குறைவோ, அல்லது தோல்வியோ ஏற்படுகிறது.
இதற்கு என்ன காரணம் என்றால் ஆசிரியர் பாடம் நடத்தும்போது அதில் கவனத்தை செலுத்தாமல் எங்கோ, எதையோ நினைத்துக்கொண்டோ, பார்த்துக்கொண்டோ இருப்பதுதான்.
இதை நீங்கள் தவிர்த்து, பாடம் நடத்தும்போது முழு கவனத்தையும் பாடத்தில் செலுத்தினால் உங்களுக்கு
பிரைவேட்டாக டியூஷன் வைக்கத் தேவை இல்லை, பரீட்சை நேரத்தில் இரவு, பகலாக டென்ஷனுடன் படிக்க வேண்டியதில்லை.
அடுத்தது மிகவும் முக்கியம், நீங்கள் படிப்பது அறிவையும், ஆற்றலையும் வளர்ப்பதற்குத்தான். அந்த அறிவை யாரிடமிருந்து பெறுகிறோம்! பெற்றோரிடமிருந்தும், ஆசிரியரிடமிருந்தும்தான். அந்த அறிவை புகட்டக்கூடியவர்களை நாம் மதிக்கவில்லை என்றால் நாம் ஒருபோதும் அறிவு ஞானம் பெறமுடியாது.
எனவே பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் கேளி, கிண்டல் செய்யாது அவர்களை மிகவும் கண்ணியமாக நடத்துங்கள்.
உங்கள் படிப்பு முடியும் வரை, பைக்கோ, செல்போனோ உபயோகப்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
இன்ஷாஅல்லாஹ்! நிச்சயமாக நீங்கள் உங்கள் படிப்பில் மட்டுமல்ல உங்கள் வாழ்விலும் முன்னேற்றம் அடைவீர்கள்.
------------------------------------------
இக்ராஃ:-
மாணவர்களின் எண்ணிக்கை குறைவுக்கான காரணம் கூறும்போது
"பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு, தொழிற்கல்வி (ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்) பயிலச் செல்லல்... கடைகளுக்கு வேலை பார்க்கச் செல்லல்..." என்று குறிப்பிட்டார்கள்.
இந்த இடைநிறுத்தம் வரக்காரணம் பொருளாதாரம் இல்லாமை.
சிலர் கல்விக்காக இயக்கங்களில் / மன்றங்களில் இருந்து உதவிகள் பெற்று படிப்பதை விரும்புவதில்லை. காரணம் அந்த உதவிகள் எல்லாம் விளம்பரப்படுத்தப்படுகிறதால், அது அவர்களின் சுய மரியாதைக்கு இழுக்கு என்று நடுத்தரக் குடும்பத்தினர் சிலர் நினைக்கின்றனர்.
எனவே, இந்த மாதிரியானவர்களுக்கு 'முழு உதவித்தொகை' என்றில்லாமல் திரும்ப பெறுகிற மாதிரி 'கடனாக' கொடுத்து உதவி செய்யலாமே. அது அவர்களுக்கு மன ஆறுதலை அளிக்கும், தொடர்ந்து படிப்பவர்கள் எண்ணிக்கையும் கூடும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross